சூர்யா கால்ஷீட் மறுப்பு: இயக்குநருக்கு வாய்ப்பளித்த சிவகார்த்திகேயன்

Published On:

| By Kavi

மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்திருக்கிறார்.

இந்தப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

2023 ஜூன் 29 வியாழக்கிழமையன்று மாவீரன் படத்தை வெளியிடத் திட்டமிட்டு அதற்கேற்ப வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கடுத்து ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் காஷ்மீரில் தொடங்கவிருக்கிறது.

ADVERTISEMENT

அதற்கடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இன்னொரு புதியபடத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தப் படத்தை இன்று நேற்று நாளை மற்றும் இன்னும் வெளிவராத அயலான் ஆகிய படங்களை இயக்கியுள்ள ரவிக்குமார் இயக்க  சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அயலான் படம் தாமதமாகிக் கொண்டே இருப்பதால் கருணை அடிப்படையில் ரவிக்குமார் இயக்கத்தில் இன்னொரு படம் நடிப்பதாக சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டிருந்தார்.

அதேநேரம், சூர்யாவுக்கு ஒரு கதை சொல்லியிருந்தார் ரவிக்குமார். அதனால் முதலில் சூர்யா படத்தை இயக்கிவிட்டு அடுத்து சிவகார்த்திகேயன் படத்துக்கு வருவதாக ரவிக்குமார் சொல்லியிருந்தாராம்.

தற்போது ரவிக்குமாருக்கு சூர்யா கால்ஷீட் இல்லையென கூறப்பட்டதால் அதிர்ச்சியில் இருந்த இயக்குநர் ரவிக்குமாருக்கு சிவகார்த்திகேயன் வாய்ப்பு வழங்கியிருக்கிறார். இப்படம் குறித்த பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிலையில் இருக்கின்றன.

இராமானுஜம்

மாரடைப்பால் உயிரிழந்த உடற்பயிற்சியாளர்!

குளத்தில் மூழ்கி 5 பேர் பலி: தலைவர்கள் இரங்கல்!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share