கர்நாடகத்தில் வேகமாகப் பரவும் டெங்கு காய்ச்சலால் நேற்றைய (ஜூலை 7) நிலவரப்படி 7,000 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
கர்நாடகத்தின் பெங்களூருவில் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிக்மகளூருவில் 521 பேரும், மைசூருவில் 496 பேரும், ஹவேரியில் 481 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சித்ரதுர்காவில் 275 பேரும், தார்வாட்டில் 289 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசிகெரே தாலுகாவில் உள்ள முதுடிதாண்டாவில் வசிக்கும் 23 வயதான சுப்ரீதா, கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். நான்கு நாட்களுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடக் தாலுகா ஷிருஞ்சா கிராமத்தைச் சேர்ந்த சிராய் ஹோஸ்மானி என்ற 5 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான்.
மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் பரவும் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் லார்வாக்களை அழிக்க குப்பி, கம்பூசியா மீன்கள் தண்ணீர் தொட்டிகளில் விட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தூய்மை, கொசு ஒழிப்பு மற்றும் தொற்று நோயை திறம்பட நிர்வகிக்க பொது விழிப்புணர்வு ஆகியவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தபோதிலும், சில அறிக்கைகள் டெங்குவின் உருமாற்றம் இந்தாண்டு லேசானதாகவும், குறைவான அறிகுறிகளுடன் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன. கர்நாடகத்தில் இந்தாண்டு முதல் ஜிகா மரணமும் பதிவாகியுள்ளது. ஒருவர் சிகிச்சையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெங்களூர் விமான நிலையம்… இளம்பெண்ணின் வெடிகுண்டு மிரட்டல்: என்ன காரணம் தெரியுமா?
ஹெல்த் டிப்ஸ்: கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்!
பகுத்தறிவும், மக்களாட்சியும்: ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் மரணங்கள் கூறுவது என்ன?
டாப் 10 நியூஸ்: விக்கிரவாண்டி பரப்புரை நிறைவு முதல் மணிப்பூருக்கு ராகுல் பயணம் வரை!