ADVERTISEMENT

அலைச்சறுக்கு: இறுதிச்சுற்றில் ஸ்வீடன் வீரர்!

Published On:

| By Jegadeesh

இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி நாளை முடிவடைகிறது.

இந்தியா தரப்பில் 16 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட சர்வதேச அலைச்சறுக்கு வீரர்கள் இதில் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவர்.

இந்த நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள மர்மோரீஸ் கடற்கரை வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த அலைச்சறுக்கு போட்டியில், ஆண்கள் பிரிவில் இன்று (ஆகஸ்ட் 19) நடைபெற்ற அரைஇறுதியில் ஸ்வீடன் வீரர் கியான் மார்டின், ஜப்பான் வீரர் ரைஹா ஓனோவுடன் மோதினார்.

ADVERTISEMENT

இந்த போட்டியில் ரைஹா ஓனோவை வீழ்த்தி வெற்றி பெற்ற கியான் மார்டின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

அதே போல பெண்கள் பிரிவில் நடைபெற்ற அரைஇறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஜப்பான் வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

ADVERTISEMENT

முதல் அரைஇறுதிப் போட்டியில் ஷினோ மட்சுடாவும் 2-வது அரைஇறுதிப் போட்டியில் சாரா வகிடாவும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“வசந்தபாலனின் பேய் படம் போல் இருக்கும்” – டீமன் இயக்குநர்!

அதிமுக மாநாடு: அண்ணாவின் பொன்மொழியால் விமர்சிக்கும் டிடிவி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share