ஹேக் செய்யப்பட்டது உச்சநீதிமன்றத்தின் யூடியூப் சேனல்!

Published On:

| By Selvam

உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் பக்கம் இன்று (செப்டம்பர் 20) ஹேக் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் உச்சநீதிமன்ற யூடியூப் சேனல் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளும் யூடியூப் தளத்தில் பதிவேற்றப்படும்.

இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைகள் யூடியூப் தளத்தில் லைவ் செய்யப்பட்ட நிலையில், திடீரென்று ஹேக் செய்யப்பட்டது.

அதில், அமெரிக்காவைச் சேர்ந்த ரிப்பிள் லேப்ஸ் நிறுவனம் உருவாக்கிய கிரிப்டோகரன்சி தொடர்பாக வீடியோக்கள் உள்ளது. மேலும், யூடியூப் பக்கத்தில் ஏற்கனவே பதிவேற்றப்பட்ட வீடியோக்கள் பிரைவேட் செய்யப்பட்டுள்ளது.  இந்த பிரச்சனையை சரிசெய்யும் பணியில் உச்சநீதிமன்ற ஐடி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆடிப்போன ஐ.எஸ்.எல்: பந்தை கைப்பற்றும் சாக்கில் எதிர் அணி வீரரின் தலையை உடைத்த வீரர்!

வேலுமணி மீது வழக்கு… அந்தர் பல்டி அடிக்கும் விஜிலென்ஸ்… எடப்பாடி காட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share