ADVERTISEMENT

ஆசிரியர்களை கைவிட மாட்டோம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அன்பில் மகேஷ் பேட்டி!

Published On:

| By Kavi

ஆசிரியர்களை ஒருபோதும் அரசு கைவிடாது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று (செப்டம்பர் 1) தீர்ப்பு வழங்கியது. டெட் தேர்வு எழுத விரும்பாத ஆசிரியர்கள் ஓய்வு கால சலுகைகளை பெற்றுக்கொண்டு கட்டாய ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தது. 

ADVERTISEMENT

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தமிழகத்தில் ஒன்றரை லட்சம் அரசு பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஆசிரியர்கள் சங்கங்கள் கூறுகின்றன. 

இது தொடர்பாக இன்று (செப்டம்பர் 2) திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

ADVERTISEMENT

இதற்கு அவர், ” நீதிமன்றம் நேற்று ஒரு தீர்ப்பை கொடுத்திருக்கிறது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் முதல் முதன்மைச் செயலாளர்கள் வரை ஆலோசிப்போம். 

நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக கிடைத்தவுடன் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். 

ADVERTISEMENT

ஆசிரியர்களுக்கு அரணாக பள்ளிக் கல்வித் துறை உள்ளது. எங்களுடைய ஆசிரியர்கள் யாரையும் கைவிட மாட்டோம். ஆசிரியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்

இந்த தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. அரசும் இது தொடர்பாக முடிவு எடுக்கும்” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share