முன்னாள் அமைச்சர் வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு தடை!

Published On:

| By Kavi

stay to case against admk ex minister valarmathi

முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான சூமோட்டோ வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

2001-2006 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் வளர்மதியை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு பிப்ரவரி 27ஆம் தேதி முதல் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது.

இதனிடையே வளர்மதி,  ‘சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் வளர்மதி தரப்பில், “சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே முடித்து வைக்கப்பட்ட வழக்கு இது. தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்வது ஏற்புடையது அல்ல. வளர்மதி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை, அவரது கணவர் மற்றும் மகன் ஆகியோர் வருமானத்தில் தான் சொத்துகள் வாங்கப்பட்டிருக்கின்றன” என வாதிடப்பட்டது.

இதை இன்று (பிப்ரவரி 23) விசாரித்த நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மீதான சொத்து குவிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிப்பதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் மீதும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சூமோட்டோ வழக்குப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ரயில்கள் ரத்து : சிறப்பு பேருந்துகள் இயக்க கோரிய தெற்கு ரயில்வே!

WPL 2024: மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி… முதல் வெற்றியை ருசிக்குமா டெல்லி கேபிடல்ஸ்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share