டாஸ்மாக் வழக்கை ED விசாரிக்க இடைக்கால தடை… உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Selvam

supreme court stay ed proceedings

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு உச்சநீதிமன்றம் இன்று (மே 22) இடைக்கால தடை விதித்துள்ளது. supreme court stay ed proceedings

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ஏ.ஜி.மசிஹ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோஹத்கி ஆஜராகி, “டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக 2014 – 21 காலகட்டத்தில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை 41 முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்தது. இந்த வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருகிறது. ஆனால், தற்போது, 2025-ஆம் ஆண்டு இந்த வழக்கில் அமலாக்கத் துறை நுழைந்து சோதனை நடத்தி வருகிறது.

அமலாக்கத்துறை விசாரணையில் அதிகாரிகளின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், அவர்களது தனியுரிமை பறிக்கப்பட்டுள்ளது” என்று வாதிட்டனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜூ, “டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவிற்கு முறைகேடுகள் நடந்துள்ளது. அமலாக்கத்துறை இந்த வழக்கை நியாயமாக விசாரித்து வருகிறது” என்றார்.

இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், “மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தும்போது, அமலாக்கத்துறை இந்த வழக்கை ஏன் விசாரணை செய்ய வேண்டும். அமலாக்கத்துறை இந்த வழக்கில் தங்களது வரம்பை மீறியுள்ளது. அமலாக்கத்துறை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. டாஸ்மாக் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டார். supreme court stay ed proceedings

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share