ஆளுநரின் அதிகாரத்திற்கு உச்ச நீதிமன்றம் வைத்த முற்றுப்புள்ளி!

Published On:

| By Minnambalam Desk

Supreme Court put an end to Governor power

வினீத் பாலியா Supreme Court put an end to Governor power

மாநில ஆளுநர்களின் அதிகாரங்களையும் கடமைகளையும் தெளிவுபடுத்தும் குறிப்பிடத்தக்க தீர்ப்பில், உச்ச நீதிமன்றம், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை நிறுவியது. Supreme Court put an end to Governor power

மசோதாக்கள் மீதான நடவடிக்கையைக் காலவரையின்றி நிறுத்திவைக்கும் அவர்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டத்தைத் தாமதப்படுத்துவது அல்லது தடுப்பது குறித்த நீண்டகாலக் கவலைகளை இந்த முடிவு தீர்த்துவைக்கிறது. Supreme Court put an end to Governor power

சட்டரீதியான ஒப்புதல்கள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியுடனான மோதலை அடுத்து தமிழக அரசு 2023இல் தாக்கல் செய்த மனுவின் மீது வழங்கப்பட்ட தீர்ப்பு இது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மசோதாக்களை நிராகரிக்க ஆளுநர்கள் முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது என்று கூறியது.

ஒப்புதலை நிறுத்திவைத்து, மசோதாவை மறுபரிசீலனைக்காக மாநில சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்ப விரும்பினால், அதற்கான காரணங்களை வழங்க வேண்டும். சட்டமன்றம் மசோதாவை மீண்டும் நிறைவேற்றினால், அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பு அறிவித்தது.

நீதிமன்றம் இந்த நடவடிக்கைகளுக்குக் குறிப்பிட்ட காலக்கெடுவையும் அறிமுகப்படுத்தியது, ஆளுநரின் நடத்தை நீதித்துறை மறுஆய்வுக்கு உட்பட்டது என்று தீர்ப்பளித்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரி தேவையற்ற முறையில் ஜனநாயகச் செயல்முறையை நிறுத்திவைக்க முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு நிறுவுகிறது. Supreme Court put an end to Governor power

ஆளுநருடனான தமிழ்நாட்டரசின் மோதல்

Supreme Court put an end to Governor power

2023ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு ஆளுநர் ரவியுடனான நீண்டகால சர்ச்சையை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டுவந்தது. ஆளுநரின் நடவடிக்கைகள் மாநில நிர்வாகத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளதாகத் தமிழ்நாட்டரசு கூறியது. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடத் தவறியதை அது சுட்டிக்காட்டியது. அவற்றில் சில 2020முதல் நிலுவையில் உள்ளன.

இந்த விஷயத்தில் ரவிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, ஆளுநர் இறுதியாக 2023 நவம்பரில் நடவடிக்கை எடுத்தார். அவர் ஒப்புதலை நிறுத்திவைப்பதற்கான குறிப்பிட்ட காரணங்களை வழங்காமல், பத்து மசோதாக்களுக்குத் தனது ஒப்புதலை நிறுத்திவைத்தார். மீதமுள்ள இரண்டையும் அவர் அங்கீகரிக்கவில்லை, அவற்றைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பினார்.

தமிழ்நாடு சட்டமன்றம் சில நாட்களுக்குள் ஒரு சிறப்பு அமர்வைக் கூட்டி, எந்த மாற்றமும் இல்லாமல் மீண்டும் பத்து மசோதாக்களை நிறைவேற்றியது. இந்திய அரசியலமைப்பின் கீழ், ஒப்புதல் நிறுத்திவைக்கப்பட்ட பிறகு ஒரு சட்டமன்றம் ஒரு மசோதாவை மீண்டும் நிறைவேற்றினால், ​​ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.

இருப்பினும், தேசியச் சட்டங்களுடன் இவை முரண்படுவதாகக் கூறி, இந்த மசோதாக்களைக் குடியரசுத் தலைவரிடம் அனுப்புவது என்னும் முடிவை ரவி எடுத்தார். மசோதாக்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் நிறைவேற்றப்பட்ட பிறகு அவற்றை நிறுத்திவைப்பதை உச்ச நீதிமன்றம் இதிலுள்ள மையமான சட்டப் பிரச்சினையாகக் கருதியது. Supreme Court put an end to Governor power

சட்டப்பிரிவு 200 கூறுவது என்ன? Supreme Court put an end to Governor power

மாநில சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பும் செயல்முறையைப் பிரிவு 200 விவரிக்கிறது. ஆளுநருக்கு மூன்று முக்கியத் தேர்வுகள் உள்ளன: ஒப்புதலை வழங்குதல், மசோதாவைச் சட்டமாக்குதல்; ஒப்புதலை நிறுத்திவைத்தல் அல்லது மசோதாவைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புதல். Supreme Court put an end to Governor power

மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையிலான தகராறுகள் பெரும்பாலும் ஒப்புதலை நிறுத்திவைத்தல் என்னும் இரண்டாவது தேர்வைக் குறித்தவையாக இருக்கின்றன. பிரிவு 200 இந்தச் சூழ்நிலையைக் கையாளக் குறிப்பிட்ட நடைமுறையைக் கொண்டுள்ளது. ஆளுநர் மசோதாக்களுக்கான ஒப்புதலை நிறுத்திவைத்தால், அவர்கள் தங்கள் காரணங்களை விளக்கும் அல்லது மாற்றங்களைப் பரிந்துரைக்கும் செய்தியுடன் மசோதாவை “முடிந்தவரை விரைவில்” சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பலாம். பின்னர் சட்டமன்றம் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டாலோ அல்லது ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் மசோதாவை நிறைவேற்றினாலோ, ஆளுநர் இரண்டாவது முறையாக “ஒப்புதலை நிறுத்திவைக்கக் கூடாது” என்று அரசியலமைப்பு கட்டளையிடுகிறது.

Supreme Court put an end to Governor power

இந்த வழக்கு பல முக்கியமான கேள்விகளை எழுப்பியது. ஒப்புதலை நிறுத்திவைத்த பிறகு ஆளுநர் மசோதாவைத் திருப்பி அனுப்புவது கட்டாயமா? ஒரு ஆளுநர் காலவரையின்றித் தாமதப்படுத்த முடியுமா? விளக்கம் இல்லாமல் ஒப்புதலை நிறுத்திவைக்க முடியுமா? இதன் மூலம் மசோதாவையே ஒழிக்க முடியுமா? இத்தகைய முழுமையான வீட்டோ அதிகாரம் அவருக்கு உள்ளதா? சட்டமன்றம் மீண்டும் ஒரு மசோதாவை நிறைவேற்றிய பிறகு, குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அதை ஆளுநர் அனுப்ப முடியுமா? ஆளுநர் சுதந்திரமாகச் செயல்படுகிறாரா அல்லது மாநில அரசின் ஆலோசனையின் பேரில் செயல்படுகிறாரா? ஆளுநரின் சட்ட நடவடிக்கைகளுக்குக் கால வரம்பு உள்ளதா? நீதிமன்றங்கள் இந்த நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய முடியுமா?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தெளிவான பதில்களை வழங்கியது. அரசியலமைப்பு நடைமுறைகளின்படி ஆளுநரின் அதிகாரங்களைக் கணிசமாகக் கட்டுப்படுத்துகிறது.

ஆளுநர் ஒப்புதலை நிறுத்திவைப்பது இறுதி நிராகரிப்பு அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. ஆளுநர் “முடிந்தவரை விரைவில்” தன்னுடைய கருத்துடன் மசோதாவை சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பும் நடைமுறையைத் தொடங்க வேண்டும். விளக்கம் அல்லது கூடுதல் நடவடிக்கை இல்லாமல் ஆளுநர் ஒப்புதலை நிறுத்திவைக்க முடியும் என்ற கருத்து அரசியலமைப்பில் எந்த அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சட்டமன்றம் அதைத் திரும்பப் பெற்ற பிறகு, அதை மீண்டும் நிறைவேற்ற வேண்டாம் என்று முடிவு செய்தால் மட்டுமே ஒரு மசோதா தோல்வியடையும்.

காலவரையற்ற தாமதத்தின் மூலம் ஆளுநர் பயன்படுத்தும் வீட்டோ அதிகாரத்தையும் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மசோதாக்களைத் திருப்பி அனுப்புவதற்கு “முடிந்தவரை விரைவில்” ஆளுநர் ஒரு முடிவை “அறிவிக்க” வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுவதைத் தீர்ப்பு வலியுறுத்தியது. மசோதாக்களைக் காலவரையின்றி முடக்கத்தில் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அது கூறியது.

தாமதங்கள் குறித்த பிரச்சினையைக் கையாண்ட நீதிமன்றம் செயல்பாட்டுக்கான காலக்கெடுவை நிர்ணயித்தது. அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஆணைய அறிக்கைகள், முந்தைய அரசாங்க வழிகாட்டுதல்களிலிருந்து இதற்கான வழிகாட்டுதல்களைப் பெற்றது. அதன்படி ஒரு ஆளுநர், அமைச்சரவை ஆலோசனையை ஏற்றுக்கொண்டால் ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் மூன்று மாதங்களுக்குள் அதைப் பரிசீலனைக்கு அமைச்சரவைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுநர், தன்னுடைய பரிசீலனைக்கு அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் ​​மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். அதற்கு மேல் தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை மாநில அரசுக்கு விளக்க வேண்டும். Supreme Court put an end to Governor power

Supreme Court put an end to Governor power

பிரிவு 200இன் கீழ் ஆளுநரின் நடவடிக்கைகள் – அல்லது நடவடிக்கை இன்மை – நீதித்துறையின் மறுஆய்வுக்கு உட்பட்டது என்று நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு, ஆளுநர் ஒப்புதலை நிறுத்திவைப்பது அல்லது ஒரு மசோதாவைக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது, குடியரசுத் தலைவர் ஒப்புதலை நிறுத்திவைப்பது ஆகியவற்றை நீதிமன்றங்கள் ஆராயலாம். சட்டவிரோதம், நியாயமற்ற வகையில் தன்னிச்சையானது அல்லது அல்லது நேர்மையற்ற நோக்கத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகிய காரணங்களின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த நிறுத்திவைப்பு நடவடிக்கையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

தமிழ்நாட்டிற்கான தாக்கம் Supreme Court put an end to Governor power

தமிழக சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பத்து மசோதாக்களைத் தமிழக ஆளுநர் ஒதுக்கிவைத்தது சட்டவிரோதமானது என்றும் தொடக்கத்திலிருந்தே இது செல்லாது என்றும் நீதிமன்றம் அறிவித்தது. அரசியலமைப்பு குறிப்பிடும் கோட்பாடுகளின் அடிப்படையில் அது இவ்வாறு கூறியது. இந்த மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் எடுக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் இதன் மூலம் ரத்துசெய்தது.

மசோதாக்களைக் காலவரையின்றி விசாரிக்கும் ரவியின் நடத்தையையும் தீர்ப்பு கடுமையாக விமர்சித்தது. அவரது நடவடிக்கைகள் “நன்னம்பிக்கை அற்றவை” என்றும் “அரசியலமைப்பு முன்வைக்கும் நடைமுறையை அவர் மீறுவதாக”வும் அது கூறியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், வழிகாட்டுதல்களுக்கு அவர் “மரியாதை அளிக்கத் தவறிவிட்டார்” என்றும் கூறியது. Supreme Court put an end to Governor power

Supreme Court put an end to Governor power

ரவியின் செயல்பாட்டை “அரசியலமைப்பின் கட்டளையை வேண்டுமென்றே புறக்கணிக்கும் முயற்சி” என்று தீர்ப்பு குறிப்பிட்டது. இதற்காக அரசியல் சட்டப் பிரிவு 142 இன் கீழ் நீதிமன்றம் அதன் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்தப் பிரிவு நீதிமன்றத்திற்கு “முழுமையான நீதியை” வழங்கக் கிட்டத்தட்ட தடையற்ற அதிகாரத்தை அனுமதிக்கிறது. ரவி மீது “நம்பிக்கை வைப்பது கடினம்” என்பதால், மசோதாக்களை ரவிக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று நீதிமன்றம் முடிவுசெய்தது. அதற்குப் பதிலாக, பத்து மசோதாக்களும் நவம்பர் 18, 2023 அன்று ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றதாகக் கருதப்படுவதாக அது அறிவித்தது. அவை மாநில சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றப்பட்ட பிறகு அவருக்கு அனுப்பப்பட்ட நாள் அது.

தீர்ப்பின் முக்கியத்துவம் என்ன

கடந்த பத்தாண்டுகளாக இந்தியாவை பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் விரோதமான ஆளுநர்களை நியமிப்பதன் மூலம் கூட்டாட்சி உறவுகளைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. ஆளுநர்கள் மசோதாக்களை நிறைவேற்றாமல் ஒத்திப்போடுவது இப்போது இந்திய அரசியலில் பொதுவான நிகழ்வாகிவிட்டது. தமிழ்நாடு தவிர, தெலங்கானா, பஞ்சாப், கேரளம், மேற்கு வங்கம் ஆகியவை தங்கள் பணிகளில் ஆளுநர் தலையிடுவதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.

இந்தப் பின்னணியில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆளுநர்களின் அத்துமீறல்கள் மீதான நீதித்துறையின் தலையீட்டை உருவாக்குகிறது. அவர்களின் சட்ட ரீதியான பங்கின் வரம்புகளைத் தெளிவுபடுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர்கள் மசோதாக்கள்மீது முழுமையான அல்லது காலவரையற்ற வீட்டோக்களைப் பயன்படுத்தும் வாய்ப்பை நீக்குவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றங்களின் அதிகாரத்தை வலுப்படுத்துகிறது. ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கான காலக்கெடுவையும் தெளிவான நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தியதன் மூலம்  மாநில நிர்வாகத்தை முடக்கக்கூடிய தாமதங்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறையையும் உருவாக்கியிருக்கிறது.

நன்றி: தி ஸ்க்ரால் இணையதளம்

தமிழில்: தேவா Supreme Court put an end to Governor power

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share