நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வழக்கறிஞர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உச்ச நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 5) அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்றைய நிலவரப்படி, 4,435 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு இந்த அளவுக்குப் பாதிப்பு அதிகரித்துள்ளது. மொத்தம் 23,091 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தச்சூழலில் பொது இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 5) நடைபெற்ற வழக்குகள் விசாரணையின் போது கொரோனா பரவல் தொடர்பாகப் பேசினார் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்.
அப்போது அவர், “கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக செய்தித்தாள்களைப் பார்க்கிறோம். எனவே ஹைபிரிட் முறையை வழக்கறிஞர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். அதாவது ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ஆஜராகலாம். பல வழக்கறிஞர்கள் ஆன்லைனில் ஆஜராவதைப் பார்க்கிறேன். எனவே, வழக்கறிஞர்கள் ஆன்லைன் வழியே வழக்கில் ஆஜராகி வாதிட்டாலும், நாங்கள் வழக்கு விசாரணையை நடத்துவோம்” என்று கூறியுள்ளார்.
பிரியா
”சாத்தன் வேதம் ஓதுவது போல”: பாஜகவை விமர்சித்த தங்கம் தென்னரசு