உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை இணையத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். supreme court judges disclose property details
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் குமார் வர்மா வீட்டில் கட்டு கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டது நீதித்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக உள்ளக விசாரணை நடந்து வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் முயற்சியாக, நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட முடிவு செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 1 நடந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது நீதிபதிகள் தன்னார்வமாக சொத்து விபரங்களை வெளியிட வேண்டும். அந்த தரவுகள் அனைத்தும் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்று தகவல்கள் வருகின்றன.
தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உட்பட 30 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பித்துள்ளதாக உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே அனைத்து நீதிபதிகளும் தங்களது சொத்து குறித்த விபரங்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார்கள். ஆனால் அது பொதுவெளியில் கிடைக்கவில்லை என்று லைவ்லா ஊடகம் கூறியுள்ளது.
நீதிபதி வீட்டில் பணம் சிக்கியதை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. supreme court judges disclose property details