அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று (பிப்ரவரி 15) தீர்ப்பளித்தது.
தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் தேர்தல் பத்திரம் திட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய அரசு திருத்தம் செய்தது. இதன்படி தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிக்க தேவையில்லை.
தேர்தல் பத்திரம் சட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரம் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.
மேலும், “தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடைகளின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி அளிக்க வேண்டும். இதுகுறித்து மார்ச் 13-ஆம் தேதிக்குள் அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் தங்கள் இணையதள பக்கத்தில் பதிவேற்ற வேண்டும்” என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் பத்திரம் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
விஜயின் ‘GOAT’ படத்தில் இணைந்த விஜயகாந்த்… புகைப்படம் உள்ளே!