ADVERTISEMENT

உச்ச நீதிமன்றம் உத்தரவு: வெளியே வந்தார் ஜூபைர்

Published On:

| By Jegadeesh

செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறியும் ஆல்ட் நியூஸ் துணை நிறுவனரான முகமது ஜூபைரை ஜாமீனில் உடனடியாக விடுவிக்க வேண்டும் என இன்று (ஜூலை 20) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ( ஜூன் 27 )ஆம் தேதி முகமது ஜூபைரை டெல்லி காவல் துறையினர் கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்து இருந்ததாகவும், அதுகுறித்த புகாரில் முகமது ஜூபைரை கைது செய்ததாகவும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

ADVERTISEMENT

அவர் மீது மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், இந்துக் கடவுள்களை அவமதித்ததாகவும் உத்தரப் பிரதேசத்தில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கூறி உச்ச நீதிமன்றத்தில் ஜூபைர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் மனு மீதான விசாரணை இன்று ( ஜூலை 20 ) உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட், சூரிய காந்த், போபண்ணா ஆகியோர் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், டெல்லி காவல் துறை தொடர்ந்த வழக்கும் இந்த வழக்குகளும் ஒன்றாக உள்ளது. எனவே, அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், அவரை சிறையில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும். இம்மாதிரியான வழக்குகளில் .ஜூபைரை தொடர்ந்து காவலில் வைத்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை. எனவே அவரை இடைக்கால ஜாமீனில் உடனடியாக விடுவிக்க உத்தரவிடுகிறோம்” என்று தெரிவித்தனர்.

ADVERTISEMENT

மேலும் ஜூபைர் சமூக வலைதளமான ட்விட்டரில் ட்விட் செய்யக் கூடாது என்று தடை கேட்ட உத்தரப் பிரதேச அரசின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
இதையடுத்து திகார் சிறையில் இருந்து இன்று ( ஜூலை 20 ) மாலை 6 மணிக்கு விடுவிக்கப்பட்டார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share