ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை!

Published On:

| By Kavi

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதி செய்தது.

ADVERTISEMENT

இதை எதிர்த்தும், சரணடைவதில் இருந்து விலக்கு கேட்டும் ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

இம்மனு இன்று (மே 17) நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ராஜேஷ் தாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார்.

“பாலியல் துன்புறுத்தல் செய்ததை பார்த்த சாட்சி இல்லை. பெண் எஸ்.பி. கொடுத்த புகாரின் பேரில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள், தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடையும் விதித்தனர்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரண்மனை – 4 பிளாக்பஸ்டரா? வசூல் செய்தது எவ்வளவு?

“ஊதிய கோரிக்கையை நிறைவேற்றுங்கள்”: முதல்வர் ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் வேண்டுகோள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share