454 மரங்களை அனுமதி பெறாமல் வெட்டியவருக்கு ஒரு மரத்துக்கு ஒரு லட்சம் என ரூ. 4.54 கோடி அபராதம் உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே தாஜ்மகாலை சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில், கடந்த 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பகுதிதான் Taj Trapezium Zone.10,400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. முற்றிலும் மரங்கள் நிறைந்த பகுதி இதுவாகும். எனவே, Taj Trapezium பகுதி மட்டுமல்லாமல் அங்குள்ள தனியார் நிலங்களிலும் மரங்களை வெட்ட தடையுள்ளது.
இந்த நிலையில், மதுரா – விர்ந்தாவன் சாலையில் டால்மியா பார்ம் என்ற தனியார் நிலத்தில் இருந்த மரங்களை கடந்த ஆண்டு செப்டம்பர் 18 ம் தேதி முதல் சிவசங்கர் அகர்வால் என்ற தனிநபர் வெட்டி வந்துள்ளார். இரவு நேரத்தில் மட்டுமே மரம் வெட்டும் பணி நடந்துள்ளது. Supreme court fine cutting tree
தனியார் நிலத்தில் 422 மரங்களையும் சாலையோரத்தில் இருந்த 32 மரங்களையும் சிவசங்கர் வெட்டியிருக்கிறார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் அபே எஸ். ஓகா மற்றும் உஜ்ஜால் பூயான் ஆகியோர் அடங்கிய அமர்விடத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் வெட்டப்பட்ட ஒரு மரத்துக்கு ஒரு லட்சம் என 454 மரங்களுக்கு ரூ. 4.54 கோடியை அபராதமாக விதித்தனர்.
சிவசங்கர் அகர்வாலுக்கு ஆதரவாக வாதாடிய சீனியர் வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, தன்னுடைய கிளையன்ட் குற்றத்தை ஒப்புக் கொள்கிறார்.எனவே, அபாராதத் தொகையை குறைக்கும்படி நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார். Supreme court fine cutting tree
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது, ‘சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய விஷயத்தில் எந்த இரக்கமும் காட்ட முடியாது. அதிகளவிலான மரங்களை வெட்டுவது மனித உயிர்களை எடுப்பதற்கு சமமானதுதான். இனிமேல் நடப்படும் மரங்கள் வளர்ந்து பசுமை தர இன்னும் 100 ஆண்டு காலம் பிடிக்கும். அதனால், அபராதத் தொகையை குறைக்க முடியாது ‘என கறாராக கூறி விட்டனர்.