உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மையம் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
2024 நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது மற்றும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாக தேசிய தேர்வு முகமையும், மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
கடந்த 18ஆம் தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது, ஜூலை 20 ஆம் தேதி மதியத்துக்குள் தேர்வு மையம் வாரியாக முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டது.
இந்தநிலையில் மையம் வாரியான முடிவுகளை இன்று (ஜூலை 20) தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இந்த முடிவை மாணவ-மாணவிகள் https://neet.ntaonline.in/frontend/web/common-scorecard/index எனும் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். அதில் எந்த மாநிலம், எந்த நகரம் என தேர்வு செய்து முடிவை தெரிந்துகொள்ளலாம்.
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி மாணவர்களின் அடையாளங்கள் இல்லாமல் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நீட் தேர்வு வழக்கு நாளை மறுநாள் ஜூலை 22ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
அன்றைய தினம் அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அடுத்த 7 நாட்களுக்கு மழை… வானிலை மையம் அறிவிப்பு!
மூடு விழா நடத்திவிட்டு எதற்கு இந்த நாடகம்: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி!
Comments are closed.