அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியது யார் ? – உச்சநீதிமன்றம்

Published On:

| By Pandeeswari Gurusamy

PMK

பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்குவது தொடர்பான வழக்கில் அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கியது யார் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வரும் நிலையில் மாம்பழ சின்னத்தை முடக்குவது தொடர்பான வழக்கு இன்று (மார்ச் 23) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.’

ADVERTISEMENT

ராமதாஸ் தரப்பில், கட்சிக்குள் பிரச்சனை ஏற்பட்டால் சின்னத்தை முடக்கி வைப்பது தான் நடைமுறை குலுக்கல் முறையில் கொடுக்கும் முறையும் பின்பற்றவில்லை. இதனால் கட்சி யாருக்குச் சொந்தம் என்பது தீர்மானமாகும் வரை மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

அன்புமணி தரப்பில், அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. ஆணையத்திடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தங்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதாக வாதிடப்பட்டது.

ADVERTISEMENT

இதைதொடர்ந்து தலைமை நீதிபதி சூர்ய காந்த், அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கியது யார்? இரு தரப்பும் மாம்பழத்தை பிழிந்து ஜூஸ் எடுத்து விடாதீர்கள். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரெண்ட்லி மேட்ச் ஆடுகிறது என தெரிவித்தார்.

மேலும் ராமதாஸ் தரப்பு சிவில் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், சிவில் நீதிமன்றம் மனுவை மூன்று நாட்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share