குளிர்காலத்தில் தக்காளி கெட்டுப்போகாமல் பாதுகாப்பதற்கு சில விஷயங்களை பின்பற்றலாம்.
இந்தியர்களின் அன்றாட உணவு என்பது தக்காளி இல்லாமல் நிறைவடைந்துவிடாது. குழம்பு, ரசம் முதல் சாஸ் வரையில் தக்காளி நம் ஒவ்வொரு வேளை உணவில் அங்கம் வகிக்கிறது. தக்காளி சேர்க்காமல் உணவு சமைத்தால் அது சுவையாக இருக்காது என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். ஆனால், தக்காளி மற்ற காய்கறிகள், பழங்களை விட சீக்கிரம் கெட்டுப்போகும் ஒரு பொருளாக உள்ளது. குறிப்பாக குளிர் காலங்களில் தக்காளி விரைவில் கெட்டுவிடும். நாம் குளிர்காலத்தில் தக்காளி கெட்டுப்போகாமல் இருக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்றலாம்.
ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியமில்லை
தக்காளியை புதியதாக வைத்திருக்க குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டியது அவசியமில்லை. குளிர்சாதன பெட்டியில் உள்ள குளிர்ந்த காற்றானது அவற்றின் சுவை, அமைப்பு மற்றும் நிறத்தை மாற்றிவிடும். குளிர்சாதன பெட்டியில் வைக்கும்போது தக்காளி வேகமாக பழுக்க வைத்துவிடும். ஆகவே, தக்காளியை எப்போதும் மிதமான வெப்பநிலையில் நன்கு காற்றோட்டமான இடத்தில் சேமிக்க வேண்டும்.
தக்காளி காம்புகளை மேலே இருக்கும்படி வைக்கவும்
தக்காளியை அவற்றின் காம்புகள் மேலே பார்த்து இருக்கும்படி வைக்கவும். இப்படி சேமித்து வைப்பது தக்காளி கெட்டுப்போவதைக் குறைத்து, நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்கும். தக்காளியை காகிதத்தில் சுற்றி வைப்பதும் அவற்றின் சுவையைப் பாதுகாக்கிறது, கெட்டுப்போகும் வாய்ப்பைக் குறைக்கிறது. ஈரப்பத இழப்பை இது குறைப்பதோடு பாக்டீரியாக்கள் உள்ளே நுழைவதையும் தடுக்கச் செய்கிறது.
காற்றுபுகாத பாத்திரங்களில் சேமிக்கவும்
தக்காளியை காற்று புகாத பாத்திரங்களில் சேமித்து முடி வைப்பது நல்லது. இதன்மூலம் தூசி, ஈரப்பதம் மற்றும் பிற மாசுபாடுகளிலிருந்து தக்காளி பாதுகாக்கப்படுகிறது. தக்காளியை சேமிப்பதற்கு முன், வினிகர் கலந்த தண்ணீரில் உடனடியாக அவற்றைக் கழுவ வேண்டும். இது தக்காளி தோலில் பூஞ்சை உருவாகும் வாய்ப்பைக் குறைத்து அழுகும் அபாயத்தைக் குறைக்கும்.
பச்சை தக்காளியை வாங்கலாம்
தக்காளியை வாங்கும் போது, அவை சற்று பச்சை நிறத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவற்றை 4-5 நாட்களுக்குள் வீட்டிலேயே பழுக்க வைத்துவிடலாம். பின்னர் நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்கலாம்.
தக்காளியை அடிக்கடி பார்க்கவும்
தக்காளிகள் அடுக்கி வைத்திருப்பதில் ஒரு பழம் அழுகினால் மற்ற பழங்களும் விரைவில் அழுகிவிடும். அதனால் அழுகிய நிலைக்கு ஒரு தக்காளி செல்கிறது என்றால் அதனை உடனடியாக வெளியே எடுத்துவிட வேண்டும்.
