நடப்பு ஐபிஎல் சீசனில் சில அணிகள் புதிய கேப்டன்களுடன் களம் காணுகின்றன. முன்னதாக மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக, ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.
ஹர்திக் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்ததால் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோல டெல்லி கேபிடல்ஸ் அணி டேவிட் வார்னருக்கு பதிலாக ரிஷப் பண்டுடன் களம் காணவுள்ளது.
இந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனும் விரைவில் மாற்றப்படலாமென தெரிகிறது. முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் இதுகுறித்து பேசியிருந்தார்.
இதனால் தான் ரூபாய் 2௦.5௦ கோடியை கொடுத்து பேட் கம்மின்சை ஹைதராபாத் அணி எடுத்ததாக ஐபிஎல் ஏலத்தின் போதே பேச்சுகள் அடிபட்டன. தற்போது அது உண்மையாகி இருக்கிறது.
நடப்பு சீசனில் பேட் கம்மின்ஸ் தலைமையில் தான் அந்த அணி களமிறங்குகிறதாம். கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக்கோப்பை வென்றதால் செண்டிமெண்டாகவும் இந்த முடிவினை ஹைதராபாத் அணி எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.
விரைவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த புதிய கேப்டன் மாற்றம் குறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய கேப்டன் எய்டன் மார்க்ரம் தலைமையில், அந்த அணி புள்ளிப்பட்டியலில் 2022-ம் ஆண்டு 8-வது இடத்தினையும், 2023-ம் ஆண்டு 1௦-வது இடத்தினையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அர்த்தம் மாறும் அமலாக்கம்: அப்டேட் குமாரு
பாஜக வேட்பாளர் பட்டியல்… பிரதமர் முதல் நடிகர்கள் வரை – முக்கிய நபர்கள் யார் யார்?