உயிரை பணயம் வைக்குறாங்க… ஸ்டைபெண்ட் 4 டாலர்தானாம்!

Published On:

| By Kumaresan M

கடந்த ஜூன் மாதத்தில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு சென்றார். 8 நாட்களில் திரும்பி வர போடப்பட்ட திட்டம் டெக்னிக்கல் குறைபாடு காரணமாக, 9 மாதங்கள் அவர் விண்வெளியில் தங்க நேரிட்டது.

இந்த நிலையில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அவரை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சரி… அப்படியென்றால் அவருக்கு கூடுதலாக இழப்பீடு எதுவும் நாசா வழங்குமா? என்கிற கேள்வி இங்கு எழுந்துள்ளது. sunita williams salary

ஆனால், அப்படியெல்லாம் எதுவும் கூடுதலாக சம்பளம் வழங்கப்படாது என்று சொல்கிறார்கள். விண்வெளியில் சுனிதா இருக்கும் நாட்கள் அவரின் சாதாரண வேலை நாட்களாகவே பார்க்கப்படுகிறது.

விண்வெளியில் இருக்கும் நாட்களுக்கு கூடுதலாக 4 டாலர்கள் வழங்கப்படும். அந்த வகையில், சுனிதாவும் வில்மோரும் 287 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளனர். இருவரும் தலா 1,148 டாலர்களை மட்டுமே கூடுதலாக பெறுவார்கள். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் இது.

ஆனால், இவர்களின் சம்பளத்தை கேட்டால் தலை சுற்றி விடும். சுனிதா வில்லியம்ஸ் அரசு ஊழியர் ஜி.எஸ். 15 என்ற பே கிரேடில் சம்பளம் பெறுகிறார். அதாவது, ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1,25,000 டாலர்கள் முதல் 1,62,000 டாலர்கள் வரை சம்பளம் பெற வாய்ப்புள்ளது.sunita williams salary

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் 19 ஆம் தேதிக்குள் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்ப உள்ளனர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share