286 நாட்களுக்கு பிறகு மீண்டும் பூமியில் கால் பதித்த சுனிதா வில்லியம்ஸ்

Published On:

| By christopher

sunita williams bach earth after 286 days

விண்வெளியில் இருந்து 286 நாட்களுக்கு பிறகு பூமிக்கு புன்னகை முகத்துடன் இன்று (மார்ச் 19) அதிகாலை திரும்பியுள்ளார் சுனிதா வில்லியம்ஸ். sunita williams bach earth after 286 days

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சென்றனர்.

9 மாதமாக மாறிய 8 நாள் பயணம்! sunita williams bach earth after 286 days

எட்டு நாள் மட்டுமே அவர்களது விண்வெளி பயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவர்கள் சென்ற போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. நாசாவின் மீட்கும் பணிகளும் தாமதமானதால் ஒன்பது மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே அவர்கள் தங்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், சுனிதா மற்றும் வில்மோரை மீட்டு பூமிக்கும் அழைத்து வரும் பொறுப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலோன் மஸ்க்கிடம் ஒப்படைத்தார்.

பத்திரமாக திரும்பினர்! sunita williams bach earth after 286

அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘பால்கன் — 9’ ராக்கெட் உடன், ‘டிராகன்’ விண்கலம் நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் ஃப்ளோரிடாவில் இருந்து கடந்த மார்ச் 15ஆம் தேதி புறப்பட்டது. தொடர்ந்து மார்ச் 16ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது.

இதனையடுத்து சுனிதா, வில்மோர், நிக் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் நால்வரும் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டனர். 

தொடர்ந்து 17 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று அதிகாலை 2.41 மணிக்கு டிராகன் விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது. அதன்பின்னர் அதன் வேகம் குறைந்து பாராசூட் உதவியுடன் புளோரிடா கடலில் சரியாக அதிகாலை 3.27 மணிக்கு பத்திரமாக இறங்கியது.

பின்னர் கயிறு மூலம் கட்டி, அங்கு காத்திருந்த கப்பலுக்குள் டிராகன் விண்கலம் பத்திரமாக ஏற்றப்பட்டது. தொடர்ந்து விண்கலத்தில் இருந்து 4 வீரர்களையும் கடற்படை வீரர்கள் பத்திரமாக வெளியேற்றினர்.

பூமியில் கால் பதித்த சுனிதா

டிராகன் விண்கலனில் இருந்து தரையிறங்கிய சுனிதா வில்லியம்ஸ், விண்கலனை விட்டு வெளியே வந்ததும் மீட்புக்குழுவினரை நோக்கி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நால்வரும் மருத்துவ பரிசோதனைக்காக ஹூஸ்டன் விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

சுனித வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு திரும்பியதை தொடர்ந்து அவருக்கு சமூகவலைதளங்களில் பலரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share