அது மட்டும் தான் தோல்விக்கான காரணமா: கவாஸ்கர் அதிரடி கருத்து!

Published On:

| By Jegadeesh

வங்கதேசத்துக்கு எதிராக நேற்று (டிசம்பர் 4 ) நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது இந்தியா.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா வங்கதேச பவுலர்களின் பந்து வீச்சில் 41.2 ஓவரில் 186 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 73 (70) ரன்கள் எடுத்தார். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

ADVERTISEMENT

அதை தொடர்ந்து 187 ரன்களை துரத்திய வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் 41, சாகிப் 29, ரஹீம் 18 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் ஆட்டமிழந்து சென்றனர்.

அதனால் 139/6 என தோல்வியின் பிடியில் சிக்கிய அந்த அணியால் இந்தியாவின் வெற்றி உறுதியான போது விஸ்வரூபம் எடுத்த மெஹதி ஹசன் வெற்றிக்குப் போராடினார்.

ADVERTISEMENT

அப்போது வங்கதேசம் 155/9 ரன்களில் இருந்த போது வெறும் 15 ரன்களில் இருந்த அவர் கொடுத்த அழகான கேட்ச்சை விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் கோட்டை விட்டார்.

Sunil Gavaskar on Bangladesh

அதை பயன்படுத்திய ஹசன் 38* (39)ரன்கள் விளாசி முஸ்தபிசுர் ரஹ்மானுடன் இணைந்து 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேசத்துக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

ADVERTISEMENT

முன்னதாக இப்போட்டியில் ராகுல் கேட்ச்சை விட்டது தான் தோல்விக்கு காரணமென்று ரசிகர்கள் அவரை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்

ஆனால் பேட்டிங்கில் 200ரன்களை கூட எடுக்காததே தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மொத்த பழியையும் கேஎல் ராகுல் மீது போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் பேட்டியில் அவர் பேசியதாவது “உண்மையாக அது தான் தோல்விக்கு காரணம் என்று நீங்கள் சொல்ல முடியாது.

ஆம் அது கடைசி விக்கெட்டாக இருந்ததால் அதைப் பிடித்திருந்தால் போட்டி முடிந்திருக்கும் என்பதால் அதுவும் தோல்விக்கான காரணம் தான். ஆனால் பேட்டிங்கில் நீங்கள் எடுத்த 186 ரன்களையும் பார்க்க வேண்டும்”

“சொல்லப்போனால் பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டு 136/9 என்ற நிலைமைக்கு இந்தியாவின் பக்கம் வெற்றியை கொண்டு வந்தார்கள்.

அப்போது மெஹதி ஹசன் கேட்ச் விட்ட அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அற்புதமாக செயல்பட்டு எதிரணியை அட்டாக் செய்து தைரியமான ஷாட்டுகளை அடித்து வெற்றி பெற வைத்து விட்டார்.

ஆனால் உண்மையாக இந்தியா 80 – 70ரன்கள் குறைவாக எடுத்தது. ஒருவேளை இலக்கு 250 ஆக இருந்தால் இது வித்தியாசமான போட்டியாக அமைந்திருக்கும்”

“ஏனெனில் ஓவருக்கு வெறும் 4ரன்களை மட்டும் எடுங்கள் என்று நீங்கள் சொல்லும் போது தாமாகவே எதிரணிக்கு அழுத்தம் குறைந்து விடும்.

சொல்லப்போனால் அழுத்தம் இல்லாத போதிலும் அதிகப்படியான தடுப்பாட்டத்தை போட்டு வங்கதேசம் தங்களுக்கு தாங்களே அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

எனவே 70 – 80ரன்களை எக்ஸ்ட்ராவாக பேட்டிங்கில் எடுக்காததே தோல்விக்கு காரணமாகும்” என்று கூறினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கோயில் பிசினஸ்: திருமாவை விமர்சித்த நாராயணன் திருப்பதி

10 சதவீத இடஒதுக்கீடு: திமுக சீராய்வு மனு!

Photo of author
Jegadeesh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share