அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சி.வி. குமார் “மாயவன்” படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
Sci Fi திரில்லர் கதைக்களத்தில் உருவான மாயவன் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருந்தார்.
மாயவன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாக சில ஆண்டுகளுக்கு முன் சி.வி. குமார் தெரிவித்தார்.
மாயவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மாயா ஒன் (MAAYA ONE) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மாயா ஒன் (MAAYA ONE) படத்திலும் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க, சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
ஏ.கே. என்டர்டெயின்மென்ட், அட்வென்சரஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹீரோ சந்திப் கிஷன் தனது கையில் ஒரு சக்தி வாய்ந்த கிளவுஸை அணிந்து கொண்டு சண்டைக்கு தயாராக நிற்பது போல் காட்சியளிக்கிறார். அவரது பின்னே பனிமலையும், ஒரு விமானமும் தென்படுகிறது. இந்த போஸ்டரை பார்க்கும் போது இது ஒரு சூப்பர் ஹீரோ படமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் நடிகர் விஜய்யின் கத்தி படத்தில் வில்லனாக நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூடிய விரைவில் மாயா ஒன் படத்தின் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கணவனை கட்டிவைத்து மர்ம உறுப்பில் சிகரெட் சூடு: இளம்பெண் கைது!
ஹெல்த் டிப்ஸ் : திடீர் வீக்கம் வலி, அரிப்பு… சிகிச்சை அவசியமா?
பியூட்டி டிப்ஸ்: பெர்ஃபியூம், டியோடரன்ட் இல்லாமல் வியர்வை வாடையை விரட்ட…