சண்டே ஸ்பெஷல்: பலன் தராத வெயிட்லாஸ்… தீர்வு என்ன?

By christopher

|

Published on 3 Sep 2023, 6:32 AM

வெயிட்லாஸ் முயற்சியில் ஈடுபடும் பலர், “நான் பல மாதங்களாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சிகளைப் பின்பற்றி வருகிறேன். ஆனால், எடையைக் குறைக்க முடியவில்லை. என்ன பிரச்சினையாக இருக்கும்… இதற்குத் தீர்வு என்ன?” என்கிறார்கள்.

“இந்தக் கேள்வி பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறோம். முதல் வேலையாக, நீங்கள் சில விஷயங்களை செக்லிஸ்ட் போல வைத்துக்கொண்டு சரி பாருங்கள்”  என்கிறார்கள் ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.

ADVERTISEMENT

“முதலாவதாக ஆரோக்கியமான உணவு என்ற எண்ணத்தில் அவற்றை அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்வது. உதாரணத்துக்கு, ஒரு நாளைக்கு இரண்டு கிலோ கொய்யாப்பழம் சாப்பிடுவது, ஏகப்பட்ட பழங்கள் சாப்பிடுவதெல்லாம் கலோரி எண்ணிக்கையைக் கூட்டும். அதே மாதிரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்றவற்றை கைப்பிடி அளவு எடுத்துக்கொள்வது… இவற்றில் கொழுப்பும் அதிகம், புரதச்சத்தும் அதிகம்.

புரோட்டீன் ஷேக், ஜூஸ் போன்றவற்றை அதிகம் குடிப்பது. அவற்றில் சர்க்கரை அளவு அதிகமிருக்கும். பல உணவுகளில் ஃப்ரக்டோஸ், மால்டோஸ், சுக்ரோஸ் போன்ற மறைமுக சர்க்கரை அதிகமிருக்கும். எனவே உணவுப் பொருட்களை வாங்கும்போது அவற்றின் லேபிளை பார்த்து வாங்கினால் நம்மை அறியாமல் அளவுக்கதிக சர்க்கரை சேராமல் பார்த்துக் கொள்ள முடியும்.

ADVERTISEMENT

ஆரோக்கியமான உணவு என்றாலும் அளவு முக்கியம். எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சாப்பிடும் ஒவ்வொன்றையும் டைரியில் குறிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒவ்வோர் இரண்டு மணி நேரத்துக்கும் எதையாவது சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதைத் தவிர்க்கலாம். இவற்றை கவனித்து வந்தாலே எங்கே தவறு நடக்கிறது என்பதைக் கண்டுபிடித்து திருத்திக்கொள்ள முடியும். அதன் மூலம் உங்கள் எடையைக் குறைக்க முடியும்” என்று வெயிட்லாஸ் முயற்சிக்குத் தீர்வு சொல்கிறார்கள்  ஊட்டச்சத்து ஆலோசகர்கள்.

ADVERTISEMENT

இலங்கைக்கு சொகுசுக் கப்பல் சுற்றுலா… திமுக மா.செ.வின் வேற லெவல் ட்ரீட்!

அதிமுக ஆலோசனை கூட்டம்: தேதி மாற்றம்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

christopher

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel