சண்டே ஸ்பெஷல்: புத்தாண்டு முதல் இன்ஸ்டன்ட் மிக்ஸ் உணவுகளைத் தவிர்க்கலாமே…

Published On:

| By christopher

Avoid instant mix meals

தற்போது பிரியாணி முதல் கிரேவி வரை அனைத்துக்கும் இன்ஸ்டன்ட் மிக்ஸ் கிடைக்கின்றன. அவசர தேவைக்காக இதை உபயோகப்படுத்துபவர்கள், ‘நாங்கள் விருப்பப்பட்டு இந்த உணவை நாடுவதில்லை. எங்களுக்கு நேரமில்லை. அதனால்தான் இதை வாங்கி உபயோகிக்கிறோம்’ என்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நாளை (ஜனவரி 1) முதல், புத்தாண்டு சபதமாக  இன்ஸ்டன்ட் மிக்ஸ் உணவுகளைத் தவிர்க்கலாமே… அதற்கான மாற்று யோசனைகள் இதோ…

சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில், அடுத்த வார மெனுவுக்கான அடிப்படைத் தேவைகளைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, ஒரு வாரத்துக்கான காய்கறிகளை வாங்கி, அவற்றில் தேவையானவற்றை வெட்டி ஃபிரிட்ஜில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

ரெடிமேட் சிறுதானியங்கள், சேமியா பாக்கெட்டுகள், ராகி மாவு, கம்பு மாவு போன்றவற்றை வாங்கி உபயோகப்படுத்தலாம். இவற்றையும்கூட வீட்டில் வாங்கி அரைத்து உபயோகப்படுத்துவது நல்லது. இருப்பினும் நேரமில்லை என்பவர்களுக்கு, வேறு உணவுகள் இல்லை என வரும்போது, இவை பரிந்துரைக்கத்தக்கவை. குறைந்தபட்ச நன்மைகளாவது கிடைக்கும், தீமைகள் தவிர்க்கப்படும்.

குறிப்பாக கோதுமை பரோட்டா உடலுக்கு நல்லது என நினைத்து, அதைத் தேடிப்பிடித்து வாங்கி சாப்பிடுவார்கள் சிலர். ரெடி டு குக் உணவுப் பொருட்கள், எந்த வகையிலும் பரிந்துரைக்கத்தக்கவை இல்லை. எனவே கோதுமையை வாங்கி அரைத்து மாவாக்கி வீட்டிலேயே சப்பாத்தி, பரோட்டா செய்து சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கான சிறந்த வழி.

அதேபோல் இட்லி, தோசை, அடை, ராகி மாவு போன்றவைக்கு வீட்டிலேயே மாவு தயாரித்து ஃபிரிட்ஜில் சேமித்து வைத்து தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: சோர்வான கண்கள்… பிரகாசமாக பளிச்சிட…

நிவாரண நிகழ்ச்சியில் செல்ஃபி அலப்பறைகள்: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share