சன் டிவி கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்- யார் அந்த 8 பேர்?

Published On:

| By Minnambalam Desk

Sun TV Kalanidhi Maran

சன் டிவி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரது சகோதரரும் மத்திய சென்னை தொகுதி திமுக எம்பியுமான தயாநிதி மாறன், வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். Sun TV: Kalanidhi Maran Receives Legal Notice from Dayanidhi Maran – Who Are the 8 People Named?

சன் டிவி விவகாரங்கள் தொடர்பான இந்த வழக்கறிஞர் நோட்டீஸில் மொத்தம் 8 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

தயாநிதி மாறன் அனுப்பிய நோட்டீஸில் இடம் பெற்றுள்ள 8 பேர் குறித்த விவரங்கள்:

  1. கலாநிதி மாறன் – தயாநிதி மாறனின் சகோதரர்
  2. கலாநிதி மாறன் மனைவி காவேரி
  3. ரவி ராமமூர்த்தி
  4. நடராஜன்
  5. சிவசுப்பிரமணியன்
  6. ஶ்ரீதர் சுவாமிநாதன்
  7. சுவாமிநாதன்
  8. ஷரத் குமார்

ரவி ராமமூர்த்தி

ADVERTISEMENT

2001-ம் ஆண்டு முதல் சன் டிவி நெட் ஒர்க் லிமிடெட் நிறுவனத்தின் செயலாளர் ( முந்தைய பெயர்கள் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ்/ சன் டிவி லிமிடெட், சன் டிவி பிரைவேட் லிமிடெட்)

நடராஜன்

ADVERTISEMENT

சன் டிவி நெட் ஒர்க் லிமிடெட் நிறுவனத்தின் நிதித்துறை தலைவர்

சிவசுப்பிரமணியன்

தயாநிதி மாறனின் தாயார் மல்லிகா மாறன் மற்றும் அவரது குடும்பத்தினர், முதல்வர் ஸ்டாலின் தயார் தயாளு அம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆடிட்டராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவர்.

ஶ்ரீதர் சுவாமிநாதன்

2002-ம் ஆண்டு முதல் தற்போது வரை கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன் ஆகியோரது ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகியோருக்கு நிதி கட்டமைப்பு, முதலீட்டு முடிவுகள், ஆவணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட வர்த்தக ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் ஆலோசகர்.

சுவாமிநாதன்

நிதி, கார்ப்பரேட் விவகாரங்களில் கலாநிதி மாறன் மற்றும் நடராஜனுடன் இணைந்து செயல்படுபவர்.

ஷரத் குமார்

சன் டிவி நெட் ஒர்க் குழுமத்துக்கு சொந்தமான உதயா டிவி, ஜெமினி டிவி ஆகியவற்றின் பங்குதாரராக இருந்தவர். கலாநிதி மாறனின் கல்லூரி காலங்களில் இருந்தே மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். கலாநிதி மாறனின் வணிக மேம்பாடு, நிதித் திட்டமிடல் உள்ளிட்டவைகளில் முக்கிய பங்கு வகித்தவர். கலாநிதி மாறனின் பணப் பரிமாற்றம், வர்த்தக விவகாரங்கள் குறித்து நன்கு தெரிந்தவர். இந்த ஷரத் குமார் தற்போது சன் டிவி குழுமத்தில் இல்லை. கலாநிதியுடன் முரண்பட்டு கலைஞர் தொலைக்காட்சி தொடங்கியதில் முக்கியப் பங்காற்றியவர்.

இந்த 8 பேரின் பெயர்கள், தயாநிதி மாறன் அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீஸில் இடம் பெற்றுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share