சீரியல்கள் என்றாலே சன் டிவி தான் எப்பொழுதும் ராஜா. டிஆர்பியில் தொடர்ந்து முதலிடம் வகிக்கும் பல சீரியல்கள் சன் டிவியில் தான் ஒளிபரப்பாகின்றன.
அப்படி 2020-ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற சீரியல் ‘அன்பே வா’. விராட் மற்றும் டெல்னா டேவிஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.
இந்த சீரியல் ஆயிரம் எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டுள்ளது. சமீபத்திய எபிசோடுகளில் ஹீரோயின் இறந்து விடுவது போல, கதை மாற்றப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதன் பிறகு தான் இந்த சீரியல் டிஆர்பியில் குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த அன்பே வா சீரியலுக்கு எண்ட் கார்டு போட, சன் டிவி முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாக ‘மல்லி’ என்ற புதிய சீரியலை துவங்க உள்ளனர். இந்த சீரியலின் புரோமோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.
–பிரியங்கா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: ஸ்ட்ரெஸைக் குறைக்க சிறந்த வழி இதோ!
மின்னம்பலம் மெகா சர்வே: கோயம்புத்தூர்… கொங்குத் தங்கம் யாருங்ணா?
மின்னம்பலம் மெகா சர்வே: ராமநாதபுரம்…சேது பூமியில் சாதிப்பவர் யார்?