சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று (மே 17) மழை பெய்து வருகிறது. Summer rain cools Chennai
மே 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெய்யில் மக்களை வாட்டி வதைத்தது. வழக்கமாக 28 நாட்கள் கத்திரி வெயில் நீடிக்கும்.
ஆனால் இந்த ஆண்டு தென்கிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் பல்வேறு இடங்களிலும் குளிர்ந்த வானிலை நிலவியது.
அதோடு இனி வெயிலின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வு மையமும் அறிவித்தது. நேற்றோரு கோடை வெயில் முடிவுக்கு வந்ததாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று (மே 17) தமிழகத்தின் பல்வெறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
கொடைக்கானலில் பைன் பாரஸ்ட், குணா குகை ஆகிய இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது.
சென்னையை பொறுத்தவரை இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
பாடி, அண்ணாநகர், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், கொரட்டூர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட சுற்றுப் பகுதியில் மழை பெய்து மக்களவை குளிர்வித்துள்ளது.
திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Summer rain cools Chennai