அதிகரித்து வரும் வெயில்… முன்கூட்டியே தொடங்கும் கோடை விடுமுறை!

Published On:

| By christopher

summer leave started earlier due to heat

அதிகரித்து வரும் வெயிலைக் கருத்தில் கொண்டு தொடக்கக் கல்வி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வினை முன்கூட்டியே நடத்த உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. summer leave started earlier due to heat

தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு இடங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவை தாண்டியுள்ளது. இதனால் பகலில் வெளியே செல்லாமல் குழந்தைகளும், முதியோரும் வீட்டுக்குள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வரும் நிலையில், ஏப்ரல் 21ஆம் தேதி வரை ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்க கல்வி மாணவர்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.

வெயில் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், தொடக்கக் கல்வி மாணவர்களின் நலன் கருதி தேர்வினை முன்கூட்டியே நடத்தி முடிக்க வேண்டும் என பெற்றோர்களும், ஆசிரியர்களும் குரல் கொடுத்து வந்தனர்.

ADVERTISEMENT

அதனை ஏற்று கோடை விடுமுறையே முன்னே தொடங்கும் வகையில், தேர்வு தேதியை மாற்றியமைத்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 17ஆம் தேதியுடன் தேர்வு முடியும்! summer leave started earlier due to heat

அதில், “தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வரும் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மூன்றாம் பருவத் தேர்வு ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு நரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

அதன்படி வரும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்” என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share