கோடை வெப்பம் அதிகரித்து வரும் காரணத்தால் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் இன்று (ஏப்ரல் 26) அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் காலத்தில் வெயில் அதிகரித்து காணப்படும். ஆனால், தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் அதிகரித்து காணப்படுகிறது.
வழக்கமாக கோடை காலத்தில் இருக்கும் வெயிலை விட பகலில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. வெயில் அதிகரித்து காணப்படுவதால் பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து வருவதால் வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருமாறு தொழிற்சாலைகள், கட்டடப்பணி, கல் குவாரி, சாலை அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, “காலையில் விரைவாக பணியை தொடங்கி, மதிய வேளைகளில் தொழிலாளர்களுக்கு இடைவெளி அளிக்க வேண்டும். மாலையில் வெயில் குறைந்த பிறகு பணிகளை தொடங்க வேண்டும். பணி இடத்தில் போதுமான குடிநீர், நிழற்கூடங்கள் மற்றும் முதலுதவி வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.
தொழிற்சாலைகளுக்கு உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
வெப்பம் அதிகமான துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களை சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தொழிற்சாலைகளில் கழிவறைகள் தூய்மையாக பராமரிக்க வேண்டும்” என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணல் விற்பனையை ஒழுங்குப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? – தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!