பியூட்டி டிப்ஸ்: சம்மர்… கூந்தலை இப்படிப் பராமரியுங்கள்!

Published On:

| By Minnambalam Desk

வெயில் காலத்தில் தலையில் அதிகப்படியான வியர்வை படிவதால் வேர்க்கால்களில் உப்பும், அழுக்கும் படிந்துவிடும். மேலும் நீர்ச்சத்து குறைந்து விடுவதால் முடி உதிர்வு அதிகமாக இருக்கும். அதிக வியர்வை காரணமாகத் தலையில் ஒருவித துர்நாற்றமும் ஏற்படும். Summer Haircare Tips

எனவே, தினசரி தலைக்குக் குளிப்பது நலம் பயக்கும். 100 மில்லி டிஸ்டில்டு வாட்டரில் 100 சொட்டுகள் லைம் ஆயில், 100 சொட்டுகள் ரோஸ் ஆயில் கலந்து கொள்ளவும். தலைக்குக் குளித்து தலைதுவட்டிய பின் இந்தக் கலவையை ஸ்பிரே செய்து தலை வாரினால் தலையில் உள்ள துர்நாற்றம் போய்விடும்.

வெயிலுக்கு இதமாக நீங்கள் போட்டுக்கொள்ளும் இறுக்கமான பன் கொண்டைகளால் பிரச்சினைகள் வரும். அடியில் வியர்வை தங்கி முடியில் உப்பு சேர்ந்து முடி அறுபடும். முடியை லேசாக தூக்கி க்ளிப் செய்துகொள்ளலாம். அவ்வப்போது க்ளிப்பைக் கழற்றிவிட்டு கூந்தலை சிறிது உலர்த்திவிட்டுத் திரும்ப மாட்டிக்கொள்ளலாம்.

சம்மரில் நல்லெண்ணெய் தேய்த்து ஊறவிட்டுக் குளிப்பது சிறந்தது. தினசரி ஷாம்பூ உபயோகிப்பதில் தவறில்லை. சீயக்காய், ஷாம்பூ இரண்டுமே கிளீனிங் ஏஜென்ட்டுகள்தான். தினசரி ஷாம்பூ குளியல் எடுப்போர், குளிப்பதற்கு முன் தலையில் சிறிது எண்ணெய் வைத்துக் கொள்வது மண்டை ஓட்டு வறட்சியைத் தவிர்க்கும்.

நீங்கள் உபயோகப்படுத்தும் ஷாம்பூவில் பாரபன் மற்றும் சோடியம் லாரல் சல்பேட் அதிகமாக இருந்தால், கண்டிஷனர் அவசியம். கண்டிஷனர் உபயோகிக்காவிட்டால் கூந்தல் நார்போல ஆகிவிடும். தினசரி வெயிலில் போக வேண்டியிருந்தால் நல்லெண்ணெய் தடவி ஊறவிட்டுக் குளிப்பது சிறந்தது. சூரிய ஒளியால் நம் ஸ்கால்ப் பாதிக்காமல் நல்ல சன் ஸ்க்ரீனாக நல்லெண்ணெய் செயல்படும் என்று அழகுக்கலை நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். Summer Haircare Tips

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share