முடி உதிர்வும், குறைவும் ஒருவருக்கு ஏற்படுத்தும் மன அழுத்தத்துக்கு அளவே இல்லை. இதனால் ஒருவரின் தன்னம்பிக்கையைத் தீர்மானிப்பதாகவும் தலைமுடி உள்ளது. இந்த நிலையில் கோடைக்காலத்தில் உங்கள் கூந்தலை எப்படிப் பராமரிக்கலாம்?
அதிக வெயில் கூந்தலை பாதிக்கும். முடி வறண்டு உடையலாம் அல்லது செம்பட்டை நிறத்துக்கு மாறலாம். எனவே, உடலின் நீரேற்றத்துக்காக போதுமான தண்ணீர் குடியுங்கள்.
தலையின் மண்டைப்பகுதியை (Scalp) வறண்டு போகவிடக் கூடாது. எனவே, தேங்காய் எண்ணெய், சீரம், லோஷன் என உங்களின் தேவையறிந்து மருத்துவரின் ஆலோசனைப்படி தடவுங்கள்.
குளோரின் கலந்த தண்ணீர் கூந்தலுக்கு சேதத்தை உண்டாக்கும். கோடைக்காலத்தில் நீச்சல் குளங்களுக்குச் செல்லும் பழக்கம் சிலருக்கு உண்டு. நீச்சல் குளத்தின் தண்ணீரில் குளோரின் சேர்ப்பார்கள் என்பதால் கவனம் அவசியம்.
ஒரு நாளில் 50 முதல் 100 வரையிலும் கூட முடி உதிர்வு இருக்கலாம். குறிப்பாக, ஹார்மோன் பிரச்சினைகள் உண்டாகும்போது, அதிக காய்ச்சல், பிரசவம் போன்ற சூழ்நிலைகளில் முடி உதிர்வு தற்காலிகமானதாக இருக்கும். பின்பு சரியாகிவிடும். ஆனால், சாதாரணமாகவே நமக்கு கவலையை ஏற்படுத்தும் வகையில் படுக்கையில், பாத்ரூமில், வேலை செய்துகொண்டிருக்கும் அலுவலக மேஜையில் என எல்லா இடங்களிலும் முடி தென்பட்டால் அது கவனத்துக்குரியது.
இதேபோல் தலையில் அரிப்பு ஏற்படுவது, அதிக முடி வறட்சி போன்றவற்றை உணர்ந்தாலும் மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
LSGvsPBKS : மாற்றப்பட்ட கேப்டன்… முதல் வெற்றியை பதிவு செய்த லக்னோ அணி!
டிஜிட்டல் திண்ணை: ED க்கு மோடியின் அவசர அசைன்மென்ட்- அலர்ட் ஸ்டாலின்