புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ்குமார் பதவியேற்பு

Published On:

| By Selvam

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய ஆணையர்களாக சுக்பீர் சிங் சாந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் டெல்லியில் இன்று (மார்ச் 15) பதவியேற்றுக்கொண்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் சூடுபிடித்து வரும் நிலையில், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னதாக, தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே பணியிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அவரது பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் மட்டுமே பதவியில் உள்ளார்.

இதையடுத்து, சுக்பீர் சிங் சாந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட சுக்பீர் சிங் சாந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

புதிய தேர்தல் ஆணையர்களாக பதவியேற்றுள்ள சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ்குமார் ஆகிய இருவரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆவர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுக்பீர் சிங் சாந்து, உத்தரகாண்ட் மாநில தலைமை செயலாளராக பணியாற்றியவர். மேலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் இவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞானேஷ்குமார் கேரள பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகவும், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது காஷ்மீரை நிர்வகித்த அதிகாரியாகவும் இருந்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரதமர் வருகை: கன்னியாகுமரியில் மீனவர்கள் இன்று மீன் பிடிக்கத் தடை!

பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு!

GOLD RATE: லேசாக குறைந்த விலை… இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

“தொடங்க மனம் இருந்தால் போதும்” : மாணவர்களிடையே வாசிப்பு – புதிய செயல் திட்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share