சென்னையில் கரும்பு விவசாயிகள் கைது!

Published On:

| By Kalai

sugarcane farmers

கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயை மாநில அரசு எஸ்.ஏ.பி. விலையாக நிர்ணயம் செய்து வழங்கக் கோரியும், தஞ்சை ஆரூரான் சர்க்கரை ஆலை பெற்ற கரும்பு விவசாயிகள் மீதுள்ள வங்கிக் கடனை ஆலைப் பெயரில் மாற்றக் கோரியும் விவசாயிகள் பலகட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று(பிப்ரவரி 17) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது காவல்துறை அவர்களை தடுத்தும் அவர்கள் பேரணியைத் தொடர்ந்தனர்.

ADVERTISEMENT

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகளை போலீசார்  கைது செய்தனர். அவர்கள் அருகில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

கலை.ரா

ADVERTISEMENT

தடா பெரியசாமி வீடு தாக்குதல் வழக்கு: திருமாவளவனின் பெயர் சேர்ப்பு?

வாரிசு ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share