சுதாகர் ஐபிஎஸ் மத்திய பணிக்கு மாற்றம்!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். Sudhakar IPS transferred to central service

தமிழகத்தில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அவ்வபோது நிர்வாக காரணங்களுக்காக மத்திய பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

அதன்படி இன்று (மார்ச் 6) சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த சுதாகர், மத்திய போதைப்பொருள் தடுப்பு துணை இயக்குனர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கோ அல்லது மறு உத்தரவு வரும் வரையிலோ மத்திய அரசு பணியில் நீடிப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ADVERTISEMENT

2003ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் கொடநாடு கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளை கையாண்டவர்.

முன்னதாக தமிழக ஆயுதப்படை சிறப்பு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், டிஐஜி வந்திதா பாண்டே  ஆகியோர் மத்திய பணிக்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. Sudhakar IPS transferred to central service

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share