பின்னால் வந்த பைக்… திடீரென திறக்கப்பட்ட கார் கதவு… பறிபோன உயிர்!

Published On:

| By Kavi

bike accident in namakkal

நாமக்கல் அருகே பின்னால் பைக் வருவதை கவனிக்காமல் கார் கதவை திறந்ததால் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் அடுத்த வலையப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவர் விவசாயம் செய்து கொண்டு ஆட்டோ ஓட்டும் வேலையையும் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.

ADVERTISEMENT

இவரது மனைவிக்கு ஆகஸ்ட் 30ஆம் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்திருக்கிறது. இந்தநிலையில் கடந்த 31ஆம் தேதி சரணவன் இருசக்கர வாகனத்தில் நாமக்கல் டாக்டர் சங்கரன் சாலை வழியாக சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எஸ்பிஐ ஏடிஎம் அருகே சென்று கொண்டிருக்கும் போது சாலை ஓரத்தில் நின்றிருந்த கார் கதவு திறக்கப்பட்டதால் அதில் மோதி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

ADVERTISEMENT

அவரை மீட்டு கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சரவணன் சென்று கொண்டிருக்கும் போது இரு சக்கர வாகனம் வருவதை கவனிக்காமல் அலட்சியமாக கார் கதவை திறந்தது நாமக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் சித்ரா என்பது தெரியவந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தற்போது சரவணன் விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி பார்ப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்று கார்களை ஓரமாக நிறுத்தினால் பின்னால் யாராவது வருகிறார்களா இல்லையா என பார்த்த பிறகு கவனத்துடன் கார் கதவை திறக்குமாறும், விபத்துகளை தவிர்க்க சாலை விதிகளை கடைப்பிடிக்குமாறும் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

பிரியா

கூட்டணி முறிவு: கருப்பண்ணன் கருத்துக்கு கே.பி.முனுசாமி மறுப்பு!

நயன்தாராவின் “9 SKIN” – வைரலாகும் புது பிராண்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share