சென்னையில் திடீர் மழை :  மேடவாக்கத்தில் 12 செ.மீ பதிவு!

Published On:

| By Kavi

Sudden rain in Chennai

சென்னையில் திடீரென இன்று (ஏப்ரல் 16) மழை பெய்த நிலையில் அதிகபட்சமாக மேடவாக்கத்தில் 12 செ.மீ பதிவாகியுள்ளது. Sudden rain in Chennai

கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை  ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (ஏப்ரல் 15) அறிவித்திருந்தது. 

ADVERTISEMENT

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. Sudden rain in Chennai

குறிப்பாக சென்னையை பொறுத்தவரை, காலையில் வெயில் அடித்த நிலையில் 9 மணிக்கு மேல் திடீரென மேகம் கருத்து வானிலை மாறியது. 10 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. 

ADVERTISEMENT

பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரி, ஓஎம்ஆர் சாலை  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை கொட்டியது. 

தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மதுரவாயல், பூந்தமல்லி, புழல், செங்குன்றம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. 

ADVERTISEMENT

இந்தநிலையில்  இன்றுமதியம் 12 மணி வரை நிலவரப்படி சென்னை மேடவாக்கத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது. வளசரவாக்கத்தில் 11 செ.மீ., சாலி கிராமம், நெற்குன்றத்தில் தலா 10 செ.மீ., மணலியில் 9 செ.மீ., பாரிமுனையில் 8 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம், ராஜா அண்ணாமலைபுரத்தில் தலா 7 செ.மீ., நுங்கம்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 6 செ.மீ., அடையாறில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. Sudden rain in Chennai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share