பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே.அத்வானிக்கு நேற்று (ஜூன் 26) இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் உடனடி சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து எய்ம்ஸ் மருத்துவனை தரப்பில், எல்.கே.அத்வானிக்கு சிறுநீரக துறையை சேர்ந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், மருத்துவமனையில் முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் அத்வானிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரஷீத்கானின் அந்த ஒரு தவறான முடிவு.. தென்னாப்பிரிக்காவிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்!