மோடி 3.0 அமைச்சரவையில் நிரம்பி வழியும் வாரிசுகள் : ராகுல் விமர்சனம்!

Published On:

| By christopher

தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையில் 20 வாரிசுகளுக்கு பிரதமர் மோடி இடம் அளித்துள்ளதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி ஆட்சியில் அமர்ந்துள்ளது. மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றுள்ளார்.

மேலும் மத்திய அமைச்சரவையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியைச் சேர்ந்த 71 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அதனைத்தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள் அனைவருக்கும் நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அவர்களில் 20 பேர் அரசியல் வாரிசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை குறிப்பிட்டு பதவியேற்ற வாரிசு அரசியல் தலைவர்களின் பெயர்களை பட்டியலிட்டு ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

எச்டி குமாரசாமி – முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன்

ஜோதிராதித்ய சிந்தியா – முன்னாள் மத்திய அமைச்சர் மாதவ் ராவ் சிந்தியாவின் மகன் 

சிராக் பாஸ்வான் – முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன்

பியூஷ் கோயல் –  முன்னாள் மத்திய அமைச்சர் வேத் பிரகாஷ் கோயலின் மகன் 

தர்மேந்திர பிரதான் – முன்னாள் மத்திய அமைச்சர் தேபேந்திர பிரதான் மகன்

கிரண் ரிஜிஜு – அருணாச்சல் முதல் சார்பு சபாநாயகர் ரிஞ்சின் காருவின் மகன்

ஜேபி நட்டா – மத்தியப் பிரதேச முன்னாள் எம்பி மற்றும் அமைச்சர் ஜெய்ஸ்ரீ பானர்ஜியின் மருமகன் 

ஜெயந்த் சவுத்ரி – முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பேரன் 

ராம் நாத் தாக்கூர் – பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் மகன்

ராவ் இந்தர்ஜித் சிங் – ஹரியானா முன்னாள் முதல்வர் ராவ் பிரேந்திர சிங்கின் மகன்

ரவ்னீத் சிங் பிட்டு – பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன்

ராம் மோகன் நாயுடு – முன்னாள் மத்திய அமைச்சர் யெரன் நாயுடுவின் மகன்

ஜிதின் பிரசாத் –  உத்தரபிரதேச முன்னாள் எம்.பி ஜிதேந்திர பிரசாத் மகன்  

கீர்த்தி வர்தன் சிங் – உத்தரபிரதேச முன்னாள் அமைச்சர் மகாராஜ் ஆனந்த் சிங் மகன் 

அனுப்ரியா பட்டேல் – பகுஜன் சமாஜ் கட்சி & அப்னா தளம் நிறுவனர் சோனேலால் படேல் மகள் 

ரக்ஷா காட்சே – மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏவுமான ஏக்நாத் காட்சே மருமகள் 

கமலேஷ் பாஸ்வான் – உத்தரபிரதேச மக்களவை வேட்பாளர் ஓம் பிரகாஷ் பாஸ்வான் மகன்

சாந்தனு தாக்கூர் – மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் மஞ்சுல் கிருஷ்ணா தாக்கூர் மகன்

வீரேந்திர குமார் காடிக் – மத்திய பிரதேச முன்னாள் அமைச்சர் கௌரிசங்கர் ஷெஜ்வார் மைத்துனர்

அன்னபூர்ணா தேவி – பீகார் முன்னாள் எம்.எல்.ஏ ரமேஷ் பிரசாத் யாதவ் மனைவி 

 

அதில் “கட்சிக்காக பாடுபட்டவர்கள், தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு பதவி வழங்குவதையே வாரிசு அரசியல் என விமர்சித்தார் மோடி.

ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் அமைச்சரவையிலேயே வாரிசுகள் நிரம்பியுள்ளன. பேச்சுக்கும் செயல்பாடுகளுக்கும் உள்ள வித்தியாசத்திற்கு மோடி என்ன பதில் சொல்லப்போகிறார்?” என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

காங்கிரஸ் தனித்துப்போட்டி : செல்வப்பெருந்தகை – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மோதல்!

மதுரை : முதியவருக்கு 3 சிக்கலான அறுவை சிகிச்சை : அரசு மருத்துவர்கள் சாதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share