தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று (மார்ச் 15) வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். Subsidy for farmers to buy agricultural machinery
அதில் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
வேளாண் இயந்திர மயமாக்குதல் திட்டத்தின் கீழ்,
வேளாண் இயந்திரங்கள், கருவிகள் 17 ஆயிரம் உழவர்களுக்கு ரூ.215.80 கோடி மானியத்தில் வழங்கப்படும்.
வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்க ரூ.10.50 கோடி நிதி ஒதுக்கீடு.
இ-வாடகை ஆன்லைன் செயலி மூலமாக உழவர்களுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகைக்கு வழங்குவதை வலுப்படுத்திட டிராக்டர் உள்ளிட்ட 603 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் ரூ.17.37 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
டெல்டா பகுதிகளில் “சி” மற்றும் “டி” பிரிவு வாய்க்கால்களில் 2,925 கிலோ மீட்டர் நீளத்திற்குத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள ரூ.13.80 கோடி நிதி ஒதுக்கீடு.
1,000 உழவர்கள் பயனடையும் வகையில் தனித்துச் சூரியசக்தியால் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் ரூ.24 கோடி செலவில் அமைத்துத் தரப்படும்.
மானியத்தில் புதிய மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்கிட, பழைய மின்மோட்டார் பம்புசெட்டுகளை மாற்றிட 1,000 உழவர்களுக்கு ரூ 1.5 கோடி நிதி ஒதுக்கீடு.
விதைப்பு முதல் அறுவடை வரை இயந்திரமயமாக்குதலைக் கடைப்பிடித்திட ‘வேளாண் தொழில்நுட்ப முனைவோர்’ மூலம் செயல் விளக்கங்களை மேற்கொள்ள ரூ 3.85கோடி நிதி ஒதுக்கீடு.
100 திறந்த வெளிக் கிணறுகளுக்குச் சுற்றுச்சுவர், நிலத்தடி நீர் செரிவூட்டும் அமைப்புகள் ஏற்படுத்திட ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு.
வேளாண் இயந்திரங்கள் இயக்குதல், பராமரித்தலில், 300 கிராமப்புர இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகள் ரூ1.84. கோடி நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம். Subsidy for farmers to buy agricultural machinery