உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும்: ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்!

Published On:

| By Monisha

letter to governer to arrest udhayanidhi stalin

உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டெங்கு, மலேரியா, கொரோனாவை போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும். எதிர்க்க கூடாது” என்று பேசியிருந்தார்.

உதயநிதியின் இந்த பேச்சு தேசிய அளவில் பேசு பொருளானது. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்கள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் உலா வர தொடங்கின.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தது.

இதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பாஜக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து இன்று (செப்டம்பர் 5) அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமைச்சராக உள்ள ஸ்டாலின் மகன் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

மீண்டும் ஒருமுறை அவர் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால், தமிழக அரசை கலைப்பதற்கான வேலைகளில் ஈடுபடுவேன். இந்தியா என்பது அனைத்து மாநிலங்களும் இணைந்தது தான். இதில் தனி கூட்டமைப்பு இல்லை என்பதை 1991-ல் நிரூபித்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோனிஷா

அயோத்தி சாமியாரின் பேச்சு வன்முறையல்ல: செல்லூர் ராஜூ

“இந்தியா என்ற சொல் பாஜகவை மிரட்டுகிறது” – ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share