ADVERTISEMENT

18 நாட்கள் விண்வெளிப் பயணம் நிறைவு- பூமிக்கு திரும்பும் சுபான்ஷூ சுக்லா குழு!

Published On:

| By Mathi

Subanshu Shukla Space Mission

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் 18 நாட்கள் தங்கி ஆய்வு நடத்திய இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் குழு இன்று ஜூலை 14-ந் தேதி பூமிக்கு திரும்புகிறது.

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 26-ந் தேதி அமெரிக்காவில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு டிராகன் விண்கலம் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.

ADVERTISEMENT

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் மொத்தம் 7 ஆய்வுகளை சுபான்ஷூ சுக்லா மேற்கொண்டார். இந்த ஆய்வுகள் அனைத்தும் நிறைவடைந்தன.

இதனையடுத்து சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இன்று ஜூலை 14-ந் தேதி மாலை இந்திய நேரப்படி 4.35 மணிக்கு சுபான்ஷூ சுக்லா குழு, பூமிக்கு திரும்ப உள்ளது. சுபான்ஷூ சுக்லா குழு மொத்தம் 18 நாட்கள், சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி இருந்தது. இக்குழுவினருக்கு சர்வதேச விண்வெளி மையத்தில் பிரியாவிடை அளிக்கப்பட்டது. Subanshu Shukla

ADVERTISEMENT

இக்குழுவினரின் டிராகன் விண்கலம், மொத்தம் 17 மணிநேரம் பூமியை சுற்றி பயணித்து பின்னர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பசிபிப் பெருங்கடலில் தரை இறங்கும்.

விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பும் போது, பூமியின் வளிமண்டலப் பகுதியில் விண்கலம் நுழைந்து, புவி ஈர்ப்பு விசையை கடந்து பாதுகாப்பாக கடலில் விழ வேண்டும் என்பது மிக முக்கியமான கட்டம்.

ADVERTISEMENT

அண்மையில் இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பி இருந்தார். இதனையடுத்து சுபான்ஷூ சுக்லா, விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்புகிறது.

தற்போதைய நிலையில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவதில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் போல, சுபான்ஷூ சுக்லா குழுவுக்கு எந்த பிரச்சனையும் இதுவரை இல்லை என்கிறது நாசா.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share