கோடைக்காலம் தொடங்கிவிட்டது. வெப்பத்தைச் சமாளிக்க குளிர்ச்சியான உணவுகள், திரவ உணவுகள் என நம் உணவுப்பழக்கத்தை மாற்றிக்கொள்வோம். அதே முக்கியத்துவத்தை நாம் அணியும் உடைகளுக்கும் தர வேண்டும். Stylish Summer Outfit Ideas
இந்த சம்மருக்கு இதமாகவும் டிரெண்டுக்கு தகுந்தாற்போலும் காட்டன் ஆடைகளைத் தேர்வு செய்யும் டிப்ஸை வழங்குகிறார்கள் ஆடை வடிவமைப்பாளர்கள்.
”காட்டன் ஆடைகள் அணிய வேண்டும். அதே சமயம் கொஞ்சம் கிராண்டாகவும், டிரெடிஷனல் லுக்கிலும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பார்டர்களுடன் வரக்கூடிய நாராயண்பேட் காட்டன் மெட்டீரியல்களை தேர்வு செய்யலாம்.
குர்தி, சல்வார், அனார்கலி என நீங்கள் விரும்பும்படி வடிவமைத்துக் கொள்ளலாம். நாராயண்பேட் காட்டன் மெட்டீரியலில் பார்டர் பெரிதாக இருக்கும். எனவே, உயரம் குறைவாக இருப்பவர்கள் பாதி பார்டரை மட்டும் கட் செய்து பயன்படுத்தலாம்.
கோட்டா காட்டன் புடவைகள் தற்போது டிரெண்டில் இருக்கின்றன. அதில் மேக்ஸி, காட்டன் கவுன் போன்றவற்றை வடிவமைத்து அணிந்தால் தனித்துவமாக இருக்கும். காட்டன் குர்தா உடன் லெகின்ஸ், ஜீன்ஸை மேட்ச் செய்வதற்கு பதிலாக ஸ்ட்ரெயிட் கட் பேன்ட், பலாசோ போன்றவற்றுடன் மேட்ச் செய்தால் டிரெண்டியாக இருக்கும்.
மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள் கோட்டா காட்டன், சந்தேரி காட்டன் போன்ற மெட்டீரியல்களையும், பருமனானவர்கள் மல் மல், கைத்தறி காட்டன் வகைகளையும் தேர்வு செய்யலாம்.
மங்களகிரி காட்டன் மெட்டீரியலும் சம்மருக்கு பெஸ்ட் சாய்ஸ். பிளெயின் டாப், சிறிய பார்டர், கான்ட்ராஸ்ட் நிறத்தில் பேன்ட் மற்றும் துப்பட்டா என அசத்தலாக இருக்கும் மங்களகிரி காட்டன் ஆடைகள் அலுவலகப் பயன்பாட்டிற்கும் பெஸ்ட் சாய்ஸ்.
காட்டன் ஆடைகளை அணிவதில் எவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அதே கவனத்தை அவற்றைப் பராமரிப்பதிலும் செலுத்த வேண்டும். மெஷின் வாஷ் தவிர்த்து கைகளால் துவைப்பது நல்லது. மிதமான வெயிலில் காயவைத்து, மிதமான சூட்டில் அயர்ன் செய்து அணிவது கிராண்ட் லுக்கை தரும்” என்கிறார்கள். Stylish Summer Outfit Ideas