தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியவர் ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா.
ஸ்டண்ட் இயக்குனராக மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான அருண் விஜய்யின் மிஷன் படத்திற்கு ஸ்டண்ட் சில்வா தான் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றினார். அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து ஆக்சன் காட்சிகளும் பிரம்மிக்க வைக்கும் வகையில் அமைந்தது.
ஒரு ஸ்டண்ட் இயக்குனராக மட்டும் இல்லாமல், இவரது இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு சித்திரை செவ்வானம் என்ற படம் வெளியானது. இந்த படத்தில் நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா மற்றும் நடிகர் சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.
இந்நிலையில், 2024-ஆம் ஆண்டு மிக பிரமாண்டமான அதிரடி ஆக்க்ஷன் திரைப்படத்தை ஸ்டண்ட் சில்வா இயக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படம் குறித்த அப்டேட் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹிந்தியில் ஜோதிகா ரீ-என்ட்ரி… திகில் பறக்கும் ’சைத்தான்’ டீசர்!
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் தடுத்து நிறுத்தம்: பயணிகள் அவதி!
ஆணாதிக்கம் காரணமாகவே சிறுவர்கள் மீது பாலியல் வன்கொடுமை தொடர்கிறது: அலங்கார் ஷர்மா