ஹனு மேன் திரைப்படத்தின் மூலம், சூப்பர் ஹீரோ திரைப்படங்களை இன்னொரு பரிமாணத்துக்கு கொண்டு போன இயக்குநர் பிரசாந்த் வர்மா மற்றும் ஆர்கேடி ஸ்டூடியோஸ் இணைந்து உருவாக்கும் படம் ‘மஹாகாளி’
படத்தின் நாயகியை அறிமுகப்படுத்தும் விதமாக, படத்தின் நாயகி பூமி ஷெட்டி தோன்றும் போஸ்டர் அதிகாரப்பூர்வ வெளியிடப்பட்டுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 50% முடிவடைந்த நிலையில் தற்போது ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான செட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பெரிய நட்சத்திர நடிகர்கள் இல்லாவிட்டாலும் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்படும் படமாம் இது
பல முன்னணி நடிகைகள் நடிக்க ஆர்வம் காட்டினாலும், கதையின் உண்மைத் தன்மைக்காக கருமை நிறத்திலான புதிய முகமாக இந்தக் காதநாயகியை தேர்வு செய்து இருக்கிறார்களாம்.
தெய்வீக ஆற்றல் மற்றும் மர்ம அழகுடன் சிவப்பு மற்றும் பொன்னிறத்தில் தோன்றும் பூமி ஷெட்டி, மஹாகாளியின் ஆற்றல், அழிவு மற்றும் மறுபிறப்பின் இரட்டை முகங்களையும் பிரதிபலிக்கும் வகையில் பாரம்பரிய ஆபரணங்கள் மற்றும் புனித குறியீடுகளோடு கொந்தளிப்பு மற்றும் கருணையின் கலவையாக, இந்த ஃபர்ஸ்ட் லுக் இருக்கிறது.
சதையை நம்பாமல் கதையை நம்பி எடுக்கிறார்கள் போல.
வெல்டன்!
— ராஜ திருமகன்.
