கோவை ராகிங் சம்பவம்: கல்லூரி கல்வி இயக்குனர் உத்தரவு!

Published On:

| By Minnambalam

கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் கீதா இன்று (நவம்பர் 8) சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவரை மொட்டை அடித்து ராகிங் செய்த 7 சீனியர் மாணவர்களை பீளமேடு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்று கைது செய்தனர். மேலும் ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

ADVERTISEMENT

கோவை கல்லூரியில் ராகிங் சம்பவம் எதிரொலியாக அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்குனர் கீதா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

கல்லூரியில் உள்ள ராகிங் தடுப்பு குழுக்கள் மூலம் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உறுதிப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராகிங் குறித்து மாணவர்களின் புகார்களை எளிதில் பெறும் வகையில் கல்லூரி முதல்வர்கள் செயல்பட வேண்டும்.

ADVERTISEMENT

ராகிங்கில் ஈடுபடுவது குற்றம் என்று மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று உத்தரவு புறப்பித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு!

டிசம்பர் வரை பரவும் டெங்கு : மக்களே உஷார்!

 

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share