உதவிக்கு ஓடோடி வருபவர் நெப்போலியன் : குஷ்பு

Published On:

| By Kumaresan M

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் நேற்று (நவம்பர் 7) ஜப்பானில் நடைபெற்றது.  தற்போது இது தொடர்பான வீடியோக்கள் தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மணமக்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்த  திருமணத்தில் நடிகை குஷ்பு,மீனா,ராதிகா, நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இப்போது நடிகை குஷ்பூ நெப்போலியன் பற்றி  உருக்கமாக பல விஷயங்களை கலாட்டா யூடியூப் சேனலில்  பேசியுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது,  அவரோடு நான் படங்களில் நடிக்கும் போது எனக்கு நட்பு ஏற்பட்டது. நடிகர் சங்கத்திலும் செல்வாக்குடன் இருந்தார்.  யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும் உடனடியாக உதவிக்கு ஓடோடி வருவார்.

நெப்போலியன் பலருக்கும் நடிகராக தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த தந்தை. குடும்பம் என்று வந்துவிட்டால் அப்படியே உருகி விடுவார். குடும்பத்தின் மீது ரொம்பவும் பாசமுள்ள மனிதர் . நடித்துக் கொண்டிருக்கும் போது நெப்போலியன்  சென்னையில் ஒரு ஐடி பிசினஸ் தொடங்கினார். அதில் அவருக்கு 400 கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. நடிகன் என்றால் நடித்துக் கொண்டிருக்க வேண்டியதுதானே எதற்காக ஐடி பிசினஸ் செய்தார் என்று பலரும் விமர்சித்தனர்.

பின்னர், சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து செட்டில் ஆனார். அமெரிக்காவிற்கு அவர் பிசினஸ்க்காக மட்டும் செல்லவில்லை தன்னுடைய மகனுக்காகத்தான் அந்த முடிவை எடுத்தார். அங்கிருந்த சில வருடம் எங்களோடு பெரியதாக பேசவில்லை.

இரு வருடங்களுக்கு முன்பு அவரின் மனைவி எனக்கு போன் செய்து நெப்போலியனின் 60-வது பிறந்தநாளில் நீங்க எல்லாரும் கலந்துக்கணும் என்று அழைப்பு விடுத்தார். நாங்கள் அவருடைய பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட போது எங்களை பார்த்ததும் நெப்போலியன் அழுதே விட்டார்.

வெளியே கம்பீரமாக இருக்கும் அவருடைய மனது குழந்தை போன்றது. இப்போது அவருடைய மகனின் திருமணம் நடைபெற்றுள்ளது. அவருடைய பெரிய கனவு லட்சியம் நிறைவேறிவிட்டது . அவரின் முகத்தில் திருப்தியை பார்க்கும் போது எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இவ்வாறு நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து தீர்மானம்: சட்டமன்றத்தில் கைகலப்பு!

ஆளுநரை சந்தித்தது ஏன்? – கிருஷ்ணசாமி விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share