இப்போ இருக்க இளம் தலைமுறையை அதிகமா பாதிக்கக்கூடிய ஒரு விசயம் தான் மன அழுத்தம் (Stress). மன அழுத்தத்தால் வரும் பாதிப்புகளை விட அதன் காரணமாக உறக்கமின்மையால் வரும் பாதிப்புகளே அதிகம்.
40 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் நல்ல உறக்கத்தை அனுபவிப்பதில்லை என்று பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. முன்பிருந்த காலங்களில் உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. ஆனால் இப்போதோ அனைவரும் சொகுசு வாழ்கையை விரும்பி பின்பற்றுவதால் உடல் உழைப்பு என்பது குறைந்து கொண்டே வருகிறது. உடல் உழைப்பு குறைய குறைய அசதியின்மையால் உறக்கம் வர தாமதமாகும் நிலையே இருக்கிறது.
மனஅழுத்தம் இருக்கும் போது நம் உடலுக்கு அதிகம் தேவைப்படுவது உறக்கம்தான். ஆனால் நாமே அதிகப்படியான சிந்தனை(Over Thinking) மற்றும் தேவையில்லாத சிந்தனைகளால்(Unwanted Thinking) உறக்க நிலையை கடந்து விடுகிறோம்.
இவ்வாறு உறக்கத்தை தொலைப்பதால் நம் உடலில் பல்வேறு உறுப்புகள் பாதிப்படைகின்றன அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மூளை, கல்லீரல், கிட்னி போன்ற உறுப்புகள் அதிகம் பாதிக்கப்படுகிறது.
தூக்கமின்மையால் மறதி, செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் அதிகளவில் வர வாய்ப்புள்ளது.
நல்ல உறக்கம் இருந்தாலே போதும் மன அழுத்ததில் இருந்து மீண்டு வரவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். நாம் உறங்கும் நேரத்தில்தான் உடலானது சீரான முறையில் தன் இயக்கத்தை சரி செய்து கொண்டு அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் இருக்க தயாராகும்.
மன அழுத்ததையும் உறக்கத்தையும் தொடர்புபடுத்திக் கொள்ளாமல் ஏழு முதல் எட்டு மணி நேரம் நன்றாக உறங்கினாலே போதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தூக்கம் என்பது என்ன?
தூக்கம் என்பது படுத்த உடன் உறங்கி விடுவது அல்ல. முதல் ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் அன்றைய நாள் முழுவதும் நாம் செய்த விசயங்கள் மற்றும் நாம் யோசித்த விசயங்கள் நம் நினைவுகளுக்குள் வந்து செல்லும். பின்பு மெதுவாக அந்த நிலை மாறி ஏழு முதல் பதினான்காவது நிமிடம் வரை கனவுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம், அந்த கனவுகள் நாம் யோசித்தவைகள், நம்மை பாதித்தவை அல்லது நாம் ஆசைப்பட்டவை சார்ந்த கனவுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த நிலைகளுக்கு பிறகு ஆறு முதல் ஏழு மணி நேரம் நாம் உறங்குவது தான் உண்மையான உறக்க நிலை. இந்த உறக்கத்தின் போது இடையில் யாரேனும் தட்டி எழுப்பினாலோ அல்லது அதிகப்படியான சத்தம் கேட்டால் மட்டுமே உறக்கம் கலையும்.
நல்ல உறக்கம் வர சில டிப்ஸ்
1.மூச்சு சீர்படுத்துதல்
ஒன்று முதல் நான்கு வரை எண்ணும் போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும், அடுத்ததாக ஒன்று முதல் ஏழு வரை இழுத்த மூச்சை அடக்கிக் கொள்ளவேண்டும். அடுத்து ஒன்று முதல் எட்டு வரை இழுத்த மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும். கண்களை மூடிக்கொண்டு இந்த பயிற்சியை இடைவெளி விட்டு பத்து முறை செய்தால் நன்றாக உறக்கம் வரும்
2. உறங்க செல்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதன் மூலமாக உடலில் ரத்த ஓட்டம் அதிகமாகி அசதி ஏற்பட்டு நல்ல உறக்கம் வரும்.
3.கண் இமைகளை பத்து முறை மூடி திறக்க வேண்டும் சீரான இடைவெளியில் பத்து பத்தாக நாற்பது முறை மூடி திறந்துவிட்டு கைகளைக் கொண்டு கண்களுக்கு இதமான மசாஜ் கொடுப்பதால் கண்களை சுற்றி உள்ள தசைகள் அசதியாகி உறக்கம் வந்துவிடும்.
4.புத்தகம் படித்தல் மற்றும் பிடித்த பாடல்கள் கேட்பது மூலமாகவும் விரைவில் உறங்க முடியும்.
5.இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை எழுதுவதன் மூலமாகவும் நல்ல உறக்கம் வரும். நமக்கு பிடித்த விசயங்களையோ அல்லது கற்பனை கதைகளையோ எழுதும் போது விரைவில் உறக்கம் வந்துவிடும்.
கவலைய விடுங்க ஸ்ட்ரெஸ் ஆச்சா தூங்கிடுங்க…….
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமர் பிரசாத் ரெட்டி மேலும் ஒரு வழக்கில் கைது!
பெட்ரோல் குண்டு வீச்சு – நியாயமான விசாரணை இல்லை: ஆளுநர் மாளிகை!
