வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது.
தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வருகிற 21-ந் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை இருக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் இன்று (மே 19) கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும். இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழ்நாட்டை விட்டு நகர்ந்து புயலாக மாறும்.
இதன் காரணமாக கன்னியாகுமரியில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
