தமிழர்கள் மீது வன்மத்தை காட்டும் அற்ப அரசியலை நிறுத்துங்க.. மோடிக்கு ஸ்டாலின் கண்டனம்

Published On:

| By Mathi

Bihar Election 2025 Modi Stalin

தமிழர்கள் மீது வன்மத்தை வெளிப்படுத்துகிற அற்ப அரசியல் பேச்சுகளை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

பீகார் சட்டமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பீகார் மக்களை திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என பழிசுமத்தி இருந்தார். பிரதமர் மோடியின் இந்த பேச்சு, தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அவர்கள் அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒடிசா – பீகார் என்று எங்கு சென்றாலும், பா.ஜ.க.,வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பீகார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பா.ஜ.க.,வினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share