‘ஐ.பி.எல்-லுக்கு உங்கள் வீரர்களை அனுப்பாதீர்கள்’ – இன்ஜமாம் கெஞ்சல்!

Published On:

| By Kumaresan M

இந்திய கிரிக்கெட் அணி அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு அனுப்பப்படவில்லை. இந்திய அணி பங்கேற்ற ஆட்டங்கள் துபாயில் நடந்தன. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டது. Stop sending your players-Inzamam

இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஷமாம் உல் ஹக் அந்த நாட்டு சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், அவர் கூறியதாவது, ‘ பிசிசிஐ மற்ற நாட்டு டி20 தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்களை அனுமதிப்பதில்லை. எனவே, ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க உங்கள் நாட்டு வீரர்களை அனுமதிக்காதீர்கள். இந்திய மண்ணில் நடைபெறும் பணக்கார தொடரில் பங்கேற்க உங்கள் வீரர்களை அனுப்பாதீர்கள். Stop sending your players-Inzamam

இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிகஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் போன்ற வீராங்கனைகள் பிக்பாஷ், கரீபியன் பிரீமியர் லீக் தொடர்களில் விளையாடுகிறார்கள். ஆனால், வீரர்களை மட்டும் பிசிசிஐ பிறநாட்டு தொடர்களில் பங்கேற்க அனுமதிப்பதில்லை.

எனவே, உங்கள் வீரர்களை ஐ.பி.எல் போட்டிக்கு அனுப்பாதீர்கள். உங்கள் நாட்டு வீரர்களை மற்ற தொடரில் பங்கேற்க அனுமதிக்காத போது, உங்கள் நாட்டுக்கு மற்ற அணி வீரர்களை ஏன் அனுப்ப வேண்டும்?’ என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ‘இந்திய வீரர்கள் ஓய்வு பெற்றதும் மற்ற நாட்டு டி20 தொடர்களில் விளையாடுகின்றனர். தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற்ற பிறகு, தென்ஆப்ரிக்கா டி20யில் விளையாடுகிறார். யுவராஜ், இர்பான் பதான் ஆகியோர் ஓய்வுக்கு பிறகு கனடா, இலங்கை டி20 தொடர்களில் விளையாடுகின்றனர். அதாவது, ஓய்வுக்கு பிறகுதான் விளையாடுகின்றனர் என்பதை இங்கே குறிப்பிட்டு சொல்கிறேன்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். Stop sending your players-Inzamam

இந்தியன் பிரீமியர் லீக் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் முதல் முதலாக நடத்தப்பட்டது. முதல் தொடரில் மட்டும் ஷாகித் அப்ரிடி உள்ளிட்ட ஒரு சில பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினார்கள். அதே ஆண்டில் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share